tamilnadu

img

கேரள இடதுசாரி அரசின் சாதனையைப் பட்டியலிட்டு பாஜக தலைவர்களுக்கு பதிலடி - எம்.பி.ராஜேஷ்

இதோ இதுதான் எங்கள் பதில்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கேரள எதிர்ப்பு அறிக்கையை ஆதரித்து ஒரு மூத்த பாஜக தலைவரின் மற்றொரு கருத்தைப் பார்க்க நேர்ந்தது. கம்யூனிஸ்ட் ஆட்சி என்பது மிகப்பெரிய தவறு என்றும், கேரளா உருவாக்கியது பூஜ்ஜியத்தையே என்றும் அவர் கூறுகிறார். 

இதோ இதுதான் பதில், பாஜக தலைவர்கள் கேரளாவின் சாதனைகளை எண்ணிக்கொள்ளலாம்:

1    நிதிஆயோக்கின் கூற்றுப்படி, கேரளா 0.71% உடன் மிகக் குறைந்த வறுமை விகிதத்தைக் கொண்டுள்ளது. தேசிய வறுமையின் விகிதத்தை நீங்கள் கூற முடியுமா?
2    கேரளாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 12%. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) 6% மட்டுமே.
3    தொடக்க நிலை நிறுவனங்களுக்கான (ஸ்டார்ட்அப்) சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த உலகத்திறன் மதிப்பீட்டு ஆய்வு, உலகின் முதல் 5 காப்பகங்களுள் ஒன்றாகக் கேரளாவை மதிப்பிடுகிறது. தயவு செய்து கவனிக்கவும்,            நம்நாட்டிலிருந்து கேரளா மட்டுமே!
4     உலகளாவிய தொடக்க நிலை நிறுவனங்களின் (ஸ்டார்ட்அப்) சுற்றுச்சூழல் அறிக்கையின்படி திறமைகளை ஊக்குவிப்பதில் ஆசியாவிலேயே சிறந்த செயல்திறன் கொண்டதாகக் கேரளா தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது; உலகளவில் 4வது இடம்.
5    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்கள் கூட்டம் தேசிய அளவில் கேரள நிறுவன ஆண்டை சிறந்த நடைமுறையாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு வருடத்திற்குள், கேரளாவில் 1.14 லட்சம் சிறு, குறு,      நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன; அதேநேரத்தில் தேசிய அளவில் மூடப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7995 ஆகும்.
6    உங்கள் அரசாங்கத்தின் (மோடி அரசு) பொருளாதார ஆய்வின்படியே, கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (IMR) 4.4/1000 பிறப்புகள் ஆகும். உ.பி.யில் இது 50.4 ஆக உள்ளது. இதில் எது தவறு?
7    நிதிஆயோக் ஆய்வின்படி கேரளாவின் MMR (மகப்பேறு மரணம்) 19/ஒரு லட்சம் பிறப்புகள் ஆகும்; இது நாட்டிலேயே சிறந்தது. இதுதான் கேரளா செய்த தவறா?
8    பொருளாதார ஆய்வின்படி, உயர்கல்வியில் கேரளாவின் GER (மாணவர் சேர்க்கைக் குறியீடு), ‘கம்யூனிஸ்ட் ஆட்சியில்’ 38.8% லிருந்து 43.2% ஆக உயர்ந்துள்ளது. உ.பி.யில் பாஜக ஆட்சியில் இது 23.2% மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
9    11ஆம் வகுப்பில் கேரளாவின் சேர்க்கை விகிதம் 85%; தேசிய GER (மாணவர் சேர்க்கை விகிதம்) என்ன என்று சொல்ல முடியுமா?
10     எல்லாவற்றிற்கும் மேலாக, ஆக்சிஜன் பற்றாக்குறையாலோ அல்லது சிகிச்சையின்மை காரணமாகவோ தொற்றுநோய்களின் போது மக்கள் தெருவில் இறக்காத ஒரே மாநிலம் கேரளா.
மேலும் சாதனைகளின் பட்டியலை நீங்கள் விரும்பினால், தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்தவும். தயாராக உள்ளது.

- எம்.பி.ராஜேஷ் 

கேரள உள்ளாட்சித்துறை மற்றும் கலால் துறை அமைச்சர்