tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ் அறிஞர்களின் வரலாற்றுப் புரட்டு - பேரா.இர்பான் ஹபீப்

மகாத்மா காந்தி நினைவு தினமான  ஜனவரி 30 அன்று மார்க்சிய வரலாற்று ஆசிரியரும் உலகப் புகழ்பெற்ற அறிஞருமான இர்பான் ஹபீப் அவர்கள் இந்திய வரலாற்றினை திரித்து எழுதும் முயற்சிக்கு கோல்வால்கரின் “நமது தேசம் வரையறுக்கப்பட்டது” என்ற புத்தகம்தான் தொடக்கப் புள்ளியாக அமைந்தது என புதிய சோஷலிச முனைவு  என்ற அமைப்பின் சார்பில் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் குறிப்பிட் டுள்ளார். “பொய்யான வரலாறு புராதன காலம்  முதல் இன்று வரை” என்ற தலைப்பில்  பேசிய இர்பான் ஹபீப். கோல்வால்கர் தான் முதன்முதலாக இந்திய வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டார் என்று கூறுகிறார். அதன் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் இவ்விதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதுமான ஆதா ரங்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமர் ஆனவுடன் உச்சத்திற்கு சென்ற இந்த முயற்சி தற்போது மோடி ஆட்சியில் அது மேலும் புதிய சிகரத்தை எட்டி இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகம் ஹிந்து/ஆரியக் கலாச்சாரத்தின் ஒரு பகுதிதான் என பிரச்சாரத்தை துவக்கி தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள் ஆரிய இனம் தான் மிக உயர்ந்த இனம் என்ற வகையில் தங்களது பிரச்சாரத்தை செய்கின்றனர். ஆரியர்கள் புராதான இந்திய வம்சா வளிகள் என்ற வகையில் திரித்துக் கூறும் இவர்கள் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்தியாவிற்கு அந்நியர்கள் என்றும் அவர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு நாட்டிற்கு கெடுதல் மட்டுமே நடந்துள்ளது என்றும், முகலாயர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதுவும் இல்லை என்றும் கோல்வால்கர் கூறுகிறார் என்று ஹபீப் குறிப்பிட்டார். தொல்லியல் சான்றுகளோ, மொழி ஆராய்ச்சியோ அல்லது மரபியல் ஆதா ரமோ எதுவும் இந்த ஆர்எஸ்எஸ் புளுகாண்டிகளுக்கு துணைக்கு வராத நிலையில் இவர்கள் கூறுவது மிகவும் அபத்தம் எனக் கூறுகிறார். இந்திய சரித்திரம் மிகப் பழமை யானது. ஹர்ஷ சரிதம் மற்றும் ராஜதரங் கிணி போன்ற இந்தோ-பாரசீக வரலாற்று ஆவணங்களில் மிகச் சரியாக விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலுள்ள விவரங்களிலிருந்து இந்திய வரலாற்றை சரியாக கட்டமைக்க முடியும். ஆனால் இதற்கு மாறாக தற்போது  ஒரு போலியான வரலாற்றை எவ்வித ஆதா ரமும் இல்லாமல் உருவாக்கப் பார்க்கி றார்கள் இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள். இனக் கோட்பாடு உலகம் முழுவதும் நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில் பல்கலைக்கழக மானிய ஆணையம் மட்டும் ஒரு போலியான இனக் கோட் பாட்டை உருவாக்க முனைகிறது.

ஆரியர் என்ற கேள்வி? உண்மையும் புரட்டும்

கோல்வால்கரின் புத்தகத்தைப் படித்தால் சில புரட்டுகள் மையக்கருத் தாக விளங்குவதைப் பார்க்கலாம். இந்துக்களாகிய நாம் இந்த இந்திய மண்ணில் அன்னியர் படையெடுத்து கைப் பற்றும் வரை எட்டாயிரம் அல்லது பத்தாயி ரம் ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித பிரச்சினையும் இன்றி தகராறுமின்றி வாழ்ந்து வருகிறோம் என எவ்வித ஆதார மும் இன்றி கோல்வால்கர் எழுதுகிறார். பகவத் கீதை, புத்தர் பிறப்பதற்கு 1500, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதப்பட்டது. மகாபாரதம் அதற்கு முன்பாக 4500-5000 ஆண்டுகள் முந்திய பழமையான ஒன்று என கோல்வால்கர் கூறுகிறார். நாம்[ஆரியர்கள்} அந்நிய பூமியிலி ருந்து வந்து குடி ஏறினோம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் மேற்கத்திய அறிஞர்கள் சிலர் கூறுவதை நம்பி நாம் தவறாக ஒரு வரலாற்றை பார்க்கிறோம். உலகத்திலேயே இந்துக்களின் பூமியாகிய நம் நாடுதான் மிகச்சிறந்த முன்னேறிய நாகரீக சமுதாய மாக விளங்கியது. அந்த வகையில் சிந்து வெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாகத்தான் ஆரிய வேத நாகரிகம் திகழ்ந்து வந்தது என்று கூறுகிறார் கோல்வாக்கர். தற்போது காரக்பூர் ஐஐடி வெளியிட் டுள்ள காலண்டர் இந்தப் பொய்யை உண் மையாக்கும் வகையில் அமைந்துள்ளது. 

எள்ளளவும் உண்மையில்லை

ஆர்எஸ்எஸ் கூறும் சித்தாந்தத்தில் எள்ளளவும் உண்மை இல்லை.  நவீன மனித இனம் சம்பந்தமான ஆய்வில், மனித  இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தான் தோன்றியது, அங்கிருந்துதான் உலகம் முழுவதும் மனித இனம் பரவியது என்பது  நிரூபிக்கப்பட்ட உண்மை என்று ஹபீப் சுட்டிக்காட்டுகிறார். சமஸ்கிருத வரலாற்றுப் புத்தகங்கள் அனைத்திலும் ஆரியர் என்ற சொல் மதிப்பு மிக்க/மாண்புமிகு என்று அழைப்பதற் காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது  என்பதை இர்பான் ஹபீப் சுட்டிக்காட்டு கிறார். தர்ம சாஸ்திரத்தில் இந்த வார்த்தை  பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் களை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. ஈரானில் அவெஸ்தா  என்பது ஆரியர் என்ற சொல்லையே குறிக்கும் என்று குறிப்பிடும் பேராசிரியர். இர்பான் ஹபீப், கோல்வால்கர் கூட ஈரானை  துவக்கத்தில் ஆரியன் என்றே அழைத்ததாக ’சிந்தனை  கொத்துக்கள்’ என்ற தனது புத்தகத்தில் ஒப்புக்கொள்கிறார். இந்த காலகட்டத்தில் ரேஸா ஷா பெஹல்வி என்ற அரசர் இஸ்லாமை காட்டிலும் ஆரிய விழுமியங் களை தனக்கு வழிகாட்டியாக கொண்டி ருந்தார் என கோல்வாக்கர் கூறுகிறார். ஏன் ? ஈரானை இங்கே மேற்கோள் காட்டி பேசுகிறார்? என்றால் அகண்ட பாரதம் என்ற தங்களது சிந்தனையில் ஈரானும்  அடங்கும் என்பதால்தான். அவர்களது அகண்ட பாரதம் என்ற வரையறையில் மேற்கே ஈரான் முதல் கிழக்கே பர்மா வரை அடக்கம் என்பதை நாம் இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். '

மறுதலிப்பும் கூச்சலும்

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சிக் குழு புத்தகங்களில் ஆரி யர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியா விற்கு வந்தார்கள் என்பதை மிகுந்த எரிச்சலுடன் மறுதலிக்கிறார்கள். அவர்கள் இந்தியாவிலிருந்து தான்  மற்ற பகுதிகளுக்கு சென்றதாக குறிப்பிடு கிறார்கள். பல்கலைக்கழக மானியக் குழுவின் பாடத்திட்டத்தில் கூட வரலாற் றுக்கு முந்திய காலகட்டத்தில் ஆப்பிரிக்கா வில் இருந்துதான் மனித இனம் உலகின் பல பகுதிகளுக்கு சென்றது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். அதே காலகட்டத்தில் பல்வேறு சமுதாயத்தினர் கஜகஸ்தான் மற்றும் ரஷ்ய புல்வெளி பிரதேசத்தில் வசித்த வர்கள் குதிரைகள் மூலம் மத்திய ஆசியா வந்து அங்கிருந்து ஆப்கானிஸ்தான் வழியாக ஈரானுக்கும் - இந்தியாவிற்கும் புலம்பெயர்ந்து வந்தனர் என்பதுதான் தொல்லியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் வாத மாகும். இத்தகைய புலம் பெயர்வு கிறிஸ்து வுக்கு 1500 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றிருக்கலாம் என்பது மரபியல் ஆராய்ச்சியாளர்கள் ஆதாரப் பூர்வமாக நிரூபித்துள்ள விஷயமாகும். ஆனால் இந்துத்துவா சித்தாந்தவாதிகள், ஆரியர்கள் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்ததாக அவர்களாகவே கற்பி தம் செய்து கொண்டு கூச்சலிடுகின்றனர். உண்மையில் வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் ஆரியர்கள் புலம்பெயர்ந்து வந்தனர் என்று  குறிப்பிடுகிறார்களே தவிர படையெடுத்து வந்ததாக யாரும் குறிப்பிடவில்லை. ஆரியர்கள் ஒரு அரசாக இருந்து இந்தியாவின் மீது படையெடுத்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பழங்குடி இனக் குழுக்களாக இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்தார்கள் என்றே கூறப்படுகிறது. ரிக் வேதத்தில் கூட இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்தியாவில் ஆரிய நாகரிகம் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முந்தியது என்று கூறுவது வரலாற்றை தலைகீழாக புரட்டிப் போடுவதாகும். சிந்து சமவெளி நாகரீகத்தில் குதிரை இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் ரிக் வேதத்தில் குதிரைகள் மிக முக்கிய பாத்திரம் வகித்துள்ளன.

இந்தோ-ஆரிய மொழிகளில் திராவிட  மொழிகளின் தாக்கம் இருந்தது என்பதை ஹபீப் குறிப்பிடுகிறார். புலம்பெயர்ந்து வந்த இவர்களின் மொழி மீது அதற்கு முன்னரே இருந்து  வந்த {திராவிட} மொழிகளின் தாக்கம் இருக்கும் என்பது இயற்கைதானே. ஆனால் ஆர்எஸ்எஸ் காரர்கள் இத்த கைய கருத்தினை ஏற்றுக் கொள்ள தயா ராக இல்லை. காரணம், சிந்து சமவெளி  நாகரிகம் ஆரிய நாகரீகத்திற்கு முந்தி யது என்று ஏற்றுக்கொண்டால் பின்னர்  மொழி ரீதியாகவும் திராவிட மொழிக ளின் தாக்கம் ஆரிய மொழிகளின் மீது  இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆரியர்கள் வருவதற்கு முன்பா கவே திராவிடர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்று ஏற்றுக்கொண் டால் ஆரிய மேலாதிக்கத்தை நிறுவ முடியாது அல்லவா? அதனால்தான் அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

வனவாசிகள் என அழைப்பதேன்?

அதுமட்டுமல்ல, ஆதிகாலத்தில் இந்தியாவில் வனப் பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்களை ஆர்எஸ்எஸ் காரர்கள் “வனவாசிகள்” என்றே அழை க்கிறார்கள். உண்மையில் அவர்களை ‘ஆதிவாசிகள்’ என்றுதான் அழைக்க வேண்டும். “ஆதிவாசிகள்” என்று அழைத்தால் அவர்கள் இந்தியாவின் பூர்வ குடிமக்கள் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா? அத னால் தான் அவர்களை ஆர்எஸ்எஸ் காரர்கள் “வனவாசிகள்” என்று அழைக்கின்றனர். சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத் துக்கள், கருத்தியல் மற்றும் ஓவியங் கள் சங்பரிவார் கும்பலை மிரட்டுவதாக உள்ளது. அசோகனின் கல்வெட்டுக்க ளில் கூட ஆரியர்கள் எழுதினார்கள் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. அக்காலத்தில் தென்னிந்தி யாவிலும், இலங்கையிலும் திராவிட மொழிகளில் தான் அனைத்தும் எழுதப் பட்டிருந்தது என்பதற்கு சான்று ஆதா ரங்கள் உள்ளன. திராவிட மொழிகளில் மீன் குறியீடும், அம்பு குறியீடும் உள்ளன. தொல் திராவிட மொழிகளில் குறிப்பிடப்படும் மீனையும், நட்சத்தி ரங்களையும் ”கடவுள்” என்று கூறுவது அபத்தமானது. சிந்து சமவெளி வாசகங்களில் வரும் அம்பு என்ற  குறியீடும் தொல் திராவிட மொழிகளில் வரும் அம்பு என்ற குறியீடும் சிந்து  சமவெளி நாகரிகத்துடனான தொடர் பை வெளிப்படுத்துவதாக உள்ளது என இர்பான் ஹபீப் குறிப்பிடுகிறார். 

ஆர்.சி.மஜூம்தாரின் சாடல்

ஆர்எஸ்எஸ் வரலாற்று ஆசிரியர் எனக் கூறிக்கொள்ளும் வி.எஸ்.வகா ன்கர் ரிக் வேதம் இயேசுகிறிஸ்துவிற்கு 8000 ஆண்டுகள் முந்தையது என்ற ஒரு அபத்தமான கருத்தை முன்  வைக்கிறார். ரிக் வேதத்தில் விவசாயம் கோதுமை சாகுபடி, பார்லி சாகுபடி. குதிரையை பழக்கப்படுத்தி உபயோகப் படுத்துவது ஆகியவை இடம்பெற் றுள்ளன. ஆனால் 8000 ஆண்டுகளுக்கு முன்பாக அவ்வாறான நாகரீக சமுதாயம் எதுவும் இல்லை என்பது தொல்லியல் நிபுணர்கள் கூற்றாகும். எனவே இவ்வாறு கூறுவது எவ்வ ளவு பொய்யானது என்பதை அனை வரும் புரிந்து கொள்ள முடியும்.  ஆர்எஸ்எஸின் ஆர்கனைசர் இதழில் பி.என். ஓக் என்ற வரலாற்று ஆசிரியர் மொகலாயர் கட்டிய கட்டிடங்கள் அனைத்தும் இந்துக்களால் கட்டப்பட் டது என்று கூறுகிறார். இவரது கூற்று மிகவும் தவறானது என்பதை இந்து மகா சபை உறுப்பினரும், தான் மிகவும் மதிக்கும் வரலாற்று ஆசிரியரு மான ஆர்.சி.மஜூம்தார் அவர் களே மறுக்கிறார். ஓக் அவர்களின் வாதம் மிகவும் அபத்தமானது என்பதை  கூறி அவரை சாடுகிறார். ஓக்  போன்றவர்களின் கட்டுரைகளை பிர சுரித்தால் ஆர்கனைசர் உடனான தனது தொடர்பை துண்டிக்க வேண்டியிருக் கும் என மஜும்தார் எச்சரித்தார். ஆனால் ஓக்கின்  கட்டுரைகள் ஆர்கனைசர் இதழில் பிரசுரமாகி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. 1980இல் இதேபோல் பி.என் பூரி என்ற ஆராய்ச்சியாளர் மாவீரன் அலெக்சாண்டரை  இந்திய மன்னன் புருஷோத்தமன் தோற்கடித்ததாக கட்டுரை எழுதுகிறார். இது எவ்வளவு அபத்தமானது என்பதை அனைவரும் அறிவர். ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் நோக்க மெல்லாம்  சிந்து சமவெளி நாகரிகத் திற்கு முந்தியது ஆரிய நாகரிகம் என்ற  கோட்பாட்டை நிறுவுவதும், ஆரியர் கள் இந்தியாவின் பூர்வ குடிமக்கள் என்று ஒரு பொய்யான சரித்திரத்தை நிலைநாட்டுவதும் தான்.

- தமிழில்: க.உதயகுமார்