tamilnadu

அவர் வடை சுடுகிறார் ,இவர் அடை சுடுகிறார்

ரதமராக இன்றைக்கு இருக்கும்மோடி அவர்கள் இதே கன்னி யாகுமரிக்கு கடந்த முறை நடைபெற்ற தேர்தல் நேரத்தில் வந்தார். அவர் அப்பொழுது கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிமொழி, வாக்குறுதி தந்தது என்னவென்றால், நான் பிரதமராக வந்தால் இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்னென்ன செய்யப் போகின்றேன் என்று அவருடைய வாயால் எடுத்துச் சொன்னது.


l கன்னியாகுமரியை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக மாற்றுவது, மாற்றியிருக்கின்றாரா?


l இலங்கை கடற்படையால் ஒரு மீனவர் கூட சாகமாட்டார்கள் என்றார். 5 ஆண்டு காலமாக எத்தனை மீனவர்கள் இறந்து போயிருக்கிறார்கள்? 


இலங்கை கடற்படையால் ஒரு மீனவர்கள் கூட கைதுசெய்யப்படமாட்டார்கள் என்றார்.கைதுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் நூற்றுக்கணக்கானோர் இலங்கை சிறையில் அடைபட்டிரு க்கின்றார்கள். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை இருந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் குஜராத்தில் இருக்கக்கூடிய மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படை யால் பல பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த இரண்டு மாநில பிரச்னைகளையும் தீர்த்து வைக்க இதற்கென்றே கண்காணிப்புக் குழு அமைப்புஒன்றை ஏற்படுத்த போகின்றேன் என்று சொல்லி ஐந்து வருடம் ஆகிவிட்டது.இதுவரையில் அது அமைக்கப்பட்டி ருக்கின்றதா? அல்லது அமைப்பதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றாரா? எதுவும் உருவாகவில்லை.எனவே, வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி. இதுபோன்ற அறிவிப்புகளையும் உறுதிமொழிகளையும் வாரி வாரி வழங்குவார்.கன்னியாகுமரி தொகுதியில் நமது வேட்பாளர் வசந்தகுமார் அவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய வேட்பாளர் பொன்னார். அவர் பி.ஜே.பி-யின் மோடியின் சிஷ்யனாக, மோடியின் வேட்பாளராக, வாயில் வடை சுடக்கூடிய மோடியின் வேட்பாளராக நிற்கின்றார். அவரும் கடந்த தேர்தலில் எண்ணற்ற வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கினார். நான் இரண்டு நாட்களாக உட்கார்ந்து பட்டியல் எடுத்தேன். கன்னியாகுமரிக்கு செல்கின்றோம். என்ன சொல்லி இருக்கின்றார், என்ன செய்திருக்கின்றார். அதை மக்களிடத்தில் சொல்ல வேண்டும் என்று எடுத்தேன். அதில் 63 உறுதிமொழிகள் கொடுத்திருக்கின்றார்


அவர் வாயில் வடை சுடுகிறார். இவர் அடை சுடுகின்றார். கடந்த தேர்தல் நேரத்தில் அதில் குறிப்பாக, குமரியில் ஸ்மார்ட் சிட்டி கொண்டு வருவேன் என்றார். கொண்டு வந்திருக்கின்றாரா?


l தொழில்நுட்ப பூங்கா அமைப்பேன் என்றார். அமைத்திருக்கின்றாரா?


l சித்த மருத்துவமனை கழகத்தை கொண்டு வருவேன் என்றார். அமைத்து விட்டாரா?


l விவசாயக் கல்லூரியை உருவாக்கி தருவேன் என்றார். உருவாக்கி விட்டாரா?


l புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா?


l ரப்பர் பூங்கா அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா?


l கன்னியாகுமரியில் ரப்பர் ஆராய்ச்சி மையத்தை அமைப்பேன் என்றார். அமைத்து விட்டாரா?


l மலர் சாகுபடியை ஊக்குவிப்பேன் என்று சொன்னார். செய்திருக்கின்றாரா?


l காய்கறி கிடங்கு அமைப்பேன் என்றார். அமைத்திருக்கின்றாரா?


l மீன் சேமிப்பு கிடங்கு அமைப்பேன் என்று சொன்னீர்களே, செய்திருக்கிறீர்களா?


l நாகர்கோவிலைச் சுற்றி சுற்றுச் சாலை அமைப்பேன் எனச் சொன்னீர்களே, செய்திருக்கிறீர்களா?


l மீனவர்களுக்கு நவீன வசதிகளோடு தொலைத்தொடர்பு பெற்றுத்தருவேன் என்றார், செய்திருக்கிறாரா?


l காணாமல் போகக்கூடிய மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக ரேடார் வசதியோடு ஹெலிகாப்டர் தளம் அமைப்பேன் என்றார், அமைத்துவிட்டாரா?


இன்னும் நிறைய இருக்கின்றது. சொல்லுவதற்கு வாய் வலிக்கிறது. அவ்வளவு இருக்கின்றது. அதனால்தான் சொன்னேன் அவர் வாயில் வடை சுட்டிருக்கின்றார். இவர் வாயில் அடை சுட்டிருக்கின்றார் என்று சொன்னேன். இதே பொன்னார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். ஏன் மத்தியில் அமைச்சராகவும் இருந்துபணியாற்றியிருக்கின்றார். இந்த பொறுப்பு க்கள் இருந்தும் இவ்வளவு உறுதிமொழிகள் தந்தும் அதை காப்பாற்றுகின்ற முயற்சியில் ஈடுபட்டது உண்டா, கிடையாது. விருது வாங்குவதில் நம் எடப்பாடி மிகவும் எக்ஸ்பர்ட். அதற்கெல்லாம் ஆள் செட்டப் செய்து விருது வாங்கி விடுவார். அதற்காக நான் இப்பொழுது ஒரு சிபாரிசு செய்யப் போகின்றேன். இவ்வளவு உறுதிமொழி கொடுத்து இருக்கின்றார் வாயில் அடை சுட்டிருக்கின்றார். அவருக்கு ஒரு விருது வாங்கிக் கொடுங்கள் என்று நான் ரெக்கமெண்ட் செய்கின்றேன். இதே பாரதிய ஜனதா கட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு எவ்வளவோ கொடுமைகளை, எவ்வளவோ அக்கிரமங்களை இந்தியா சந்தித்துக் கொண்டு இருப்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் ஒக்கி புயலை மறந்திட முடியுமா? நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது, மத்திய அரசு வந்ததா? மாநில அரசு நடவடிக்கை எடுத்ததா? கடற்படையும் வரவில்லை, கடலோர காவல்படையும் வரவில்லை, மீனவர்கள் யாரை நம்பி இன்றைக்கு வாழக்கூடிய நிலையில் இருக்கின்றார்கள்? அதனால்தான் சொல்கின்றோம். மத்திய அரசு மாற வேண்டும், பிரதமர் மோடி உடனடியாக வீட்டிற்கு போக வேண்டும். இன்றைக்கு மத்தியில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு சர்வாதிகார ஆட்சி. அதேபோல் தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் நடந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி உதவாக்கரை ஆட்சி. மோடி சர்வாதிகாரி, எடப்பாடி உதவாக்கரை, இருவரும் சேர்ந்தே நாட்டை குட்டிச் சுவராக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.


அதற்கு தலைப்புச் செய்திகளாக சிலவற்றை மாத்திரம் அடையாளம் காட்டுகின்றேன்.


l மத்தியில் இருப்பது ஹெலிகாப்டர் ஊழல் செய்யும் அரசு;

மாநிலத்தில் இருப்பது குட்கா ஊழல் செய்யும் அரசு.


l மத்தியில் இருப்பது குஜராத்தில் கொலை செய்த அரசு.

மாநிலத்தில் இருப்பது கொடநாட்டில் கொலை செய்த அரசு.


l மத்தியில் இருப்பது கார்ப்பரேட் அரசு.

மாநிலத்தில் இருப்பது செய்யாதுரையின் அரசு.


l செய்யாதுரை என்பவர் எடப்பாடியின் மிக நெருங்கிய நண்பர். பெரிய ஒப்பந்ததாரர். தமிழ்நாட்டில் நடைபெறும் காண்ட்ராக்ட் வேலைகள் அனைத்தையும் செய்யக்கூடியவர். அதில் வரும் கமிஷன் தான் எடப்பாடிக்கு.


l மத்தியில் இருப்பது அத்வானிக்கு துரோகம் செய்த அரசு.

மாநிலத்தில் இருப்பது அம்மாவிற்கு துரோகம் செய்த அரசு.


l மத்தியில் இருப்பவர் தன்னை மன்னராக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.

மாநிலத்தில் இருப்பவர் தன்னைக்கடவுளாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.


இப்படிப்பட்ட இரண்டு மோசடிப் பேர்வழிகளை ஆட்சியை விட்டு அனுப்ப வேண்டும். எனவே, அதற்காக தான் இங்கு நாம் குழுமியிருக்கின்றோம்.


-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமாரை ஆதரித்து நாகர்கோவிலில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து..



;