தாட்டு பூட்டு தஞ்சாவூரு இனுசுபெக்டரு இவரு!
வேட்டு போட ரோட்டில் வரார் வழியை விட்டு நகரு!
அவரு..... ஆகா.... அவரு....ஜனம்
ஆர்ப்பாட்டம் செஞ்சா ரொம்ப காட்டுவாரு பவரு!
கல்யாண ஊர்வலமும்
கருமாதி ஊர்வலம் போல்
மௌனமாக போகாட்டி
ஊதுவாரு பிகிலு - நம்ம
ஜனங்களுக்கு திகிலு!
அடிக்க கூடாதாமே தவிலு! - அதை
மீறினால் பேர்த்துவிடுவார் செவுளு!
“கா கா “ ன்னு காக்கா கூட்டம் கத்தினாலும் பாரு
கடுங்கோபமா இனுசுபெக்டரு பெல்ட்டை உருவு வாரு !
சாரு .... இந்த .... சாரு .... நாம
கோஷம் போட்டா கொரவளையில் லத்திய குத்தும் ஜோரு!
தவளைச் சத்தம் நடுநிசியில்
சளசளன்னு கூச்சலிட்டா
தர்ணா எங்கோ நடப்பதாக
ஆகுவார் உ ஷாரு ! - ரொம்ப
அதகளம் பார் ஊரு !
ரோந்து போக எடுப்பாரு காரு! - அவர்
பேந்தப் பேந்த பிறகுமுழிப் பாரு!
காசு பணம் வெள்ளித்துட்டு கலகலக்குற ஓச
மட்டும் கேட்க மந்திரிக்கு மகாமகா ஆச!
கூச .... நாக்....கூச ....மந்திரி
திட்டுவாரு இனுசுபெக்டர கேட்டா தர்ணா ஓச!
மந்திரிக்கு சல்யூட்டு!
மக்களுக்கு வாய்ப்பூட்டு!
பொய்கேசு தினம் போட்டு
மாமூலு கையூட்டு!
அடடா போ லீச- ஜனம்
வேற எப்படி பேச?
போராட்டம் செஞ்சாமுதுகில் பூச - தர
போலீஸ்வரும் லத்திஎடுத்து வீச!