tamilnadu

img

தூய்மையில் கேரளா முதலிடம்

திருவனந்தபுரம், டிச. 3- தூய்மைப் பணியில் கேரளாவின் தலை யீட்டிற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒப்பு தல் அளித்துள்ளது. தீர்ப்பாயம் அபராதம்  விதிக்காத ஒரே மாநிலம் கேரளா. கழிவு மேலாண்மைத் துறையில் கேரளா குறிப்பி டத்தக்க தலையீடுகளைச் செய்துள்ளது என்று பசுமைத் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியது. மற்ற மாநிலங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்  படி பஞ்சாப் ரூ.2080 கோடி, தில்லி ரூ.900  கோடி, கர்நாடகா ரூ.2900 கோடி, ராஜ1 தான் ரூ.3000 கோடி, மேற்கு வங்கம் ரூ.3500 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ.3800 கோடி  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திட-திரவக்  கழிவுப் பிரச்னையைத் தீர்க்க கேரளா எடுத்  துள்ள முயற்சிகளையும், குப்பைக் குவி யல்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை களையும் பசுமைத் தீர்ப்பாயம் பாராட்டி யது. திரவக் கழிவுகளை நிர்வகிக்க கேரளா  ரூ.2343.18 கோடி மதிப்பிலான திட்டங்களை  வடிவமைத்துள்ளது. இந்தத் திட்டங்களின் மூலம் பிரச்சனை முழுமையாகத் தீர்க்கப் படாவிட்டால், பிற வழிகளுக்கான இடை வெளி நிதியாக ரூ.84.628 கோடி ரூபாய். இவற்றின் அடிப்படையில்தான் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. கழிவு மேலாண்மை திட்டங்களை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்ற திட்டத் தையும் கேரளா ஏற்றுக்கொண்டது.

;