tamilnadu

img

அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம்

சென்னை, ஜன. 28- சென்னை கே.கே.நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 28 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் சனிக்கிழமை (ஜன. 28) திறந்து வைத்தார். சென்னை கே.கே. நகரில் உள்ள  அரசு புனர்வாழ்வு மருத்துவமனை யானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ள டக்கிய மருத்துவமனையாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும்  நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக் கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்க ளில் இதுவும் ஒன்றாகும். மருத்துவ சேவை, சமூக மற்றும் தொழில் தொடர்பான மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்த அனைத்து சேவைகளும் இங்கு வழங்கப்படுகின்றன.   தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப் பட்டுள்ள புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதிகளை பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள், இலவச சக்கர  நாற்காலிகள், அடையாள அட்டை களை முதலமைச்சர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரே ஆண்டில் ரூ.277 கோடி மதிப்பில்  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள் ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் துறைக்கு இந்த ஆண்டு 3 மடங்கு  கூடுதலாக ரூ.1,808 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;