tamilnadu

img

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மாதர் சங்க மனுவை பெற ஆளுநர் மாளிகை மறுப்பு

சென்னை, பிப். 2 - ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தரக் கோரி மனு கொடுக்க சென்ற மாதர் சங்கத்தினருக்கு ஆளுநர் மாளிகை அனுமதி மறுத்தது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்பு தல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.  மசோதாவுக்கு ஒப்பு தல் தரக்கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதனையொட்டி ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட கையெழுத்து படிவங்க ளுடன் கோரிக்கை மனுவை ஆளுநர்  மாளிகையில் சமர்ப்பிக்கும் இயக் கத்தை புதனன்று (பிப்.1) நடத்தினர். இதற்காக ஆளுநர் மாளிகை அருகே  உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே திரண்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆளுநரை சந்திக்க அனுமதி இல்லாததால், ராஜ் பவனுக்கு செல்ல  அனுமதி மறுத்தனர். மேலும், தென் சென்னை மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க அறி வுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த  மாதர் சங்க தலைவர்கள், முதல மைச்சர், சட்டமன்றத்தையே மதிக்காத ஆளுநர்,

மாநில அரசின் அதிகாரியை மதிப்பாரா? ஆர்டிஓ-விடம் மனு கொடுக்க வேண்டுமென்றால் மாவட்டங்களிலேயே கொடுத்திருக்க மாட்டோமா? என்று கேள்வி எழுப்பினர். ஆளுநர் அல்லது அவரது அதிகாரிகளில் ஒருவர் மனுவை பெற்றுக் கொள்ள காவல்துறை ஏற்பாடு செய்ய வற்புறுத்தினர். அதற்கு  ஒரு வாரம் அவகாசம் வழங்குமாறு காவல்துறையினர் கோரினர். அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.ராதிகா கூறியதாவது: மாநில அரசின் 21 மசோதாக்க ளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் உள்ளார். குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்கள் மத்தியில் வெகுவாக பரவி, உயிரை பறித்துக் கொண்டுள்ளது; இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாக உள்ளது. இதுகுறித்து ஆளுநர் கவலைப்படாமல் இருக்கிறார். ஆன்லைன் தடை சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி கையெ ழுத்து படிவத்துடன் கூடிய மனுவை வழங்க 2 முறை மின்னஞ்சல் வாயிலா கவும், பதிவு தபால் மூலமாகவும் அனுமதி கோரினோம். இருப்பினும், அனுமதி தரவில்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆளுநர் கையெழுத்து மனுவை பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப் பிட்ட காலத்திற்குள் ஆளுநர் மாளிகை  அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொள்ளாவிடில், ராஜ்பவனை முற்றுகையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி,  மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொருளாளர் வி.பிரமிளா உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;