tamilnadu

img

பொருளாதார நெருக்கடி, ஜிஎஸ்டி வரி உயர்வால் இழுத்து மூடப்படும் ஆயத்த ஆடை கம்பெனிகள்

கார்மெண்ட்ஸ் தொழிலை நெருக்கடியிலிருந்து மீட்க ஒன்றிய-மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் கூறுகையில், நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக பஞ்சு கொள்முதலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஈடுபடுவதற்கு பதிலாக பதுக்கலும், விலையேற்றமும் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இதன் விளைவாக பஞ்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர்களுக்கு சம்பளக் குறைப்பு, நூல் விலையேற்றம் ஏற்படுகிறது. நூல் விலையேற்றத்தின் காரணமாக கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன.  மின்கட்டண  உயர்வு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மேலும் நெருக்கடிகளை சந்திக்கின்றன.  நத்தம் பகுதியில் கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்று பெருகிவரும் தேவைக்கேற்ப ஜவுளித்தொழிலில் ஈடுபடும் அனைவரையும் பாதுகாக்க ஒன்றிய, மாநில  அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் கூறுகையில், நவீன தாராளமயக் கொள்கைகள் காரணமாக பஞ்சு கொள்முதலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் காட்டன் கார்ப்பரேசன் ஆப் இந்தியா ஈடுபடுவதற்கு பதிலாக பதுக்கலும், விலையேற்றமும் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறது. இதன் விளைவாக பஞ்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர்களுக்கு சம்பளக் குறைப்பு, நூல் விலையேற்றம் ஏற்படுகிறது. நூல் விலையேற்றத்தின் காரணமாக கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள், விசைத்தறி கூடங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன.  மின்கட்டண  உயர்வு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மேலும் நெருக்கடிகளை சந்திக்கின்றன.  நத்தம் பகுதியில் கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்டெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இன்று பெருகிவரும் தேவைக்கேற்ப ஜவுளித்தொழிலில் ஈடுபடும் அனைவரையும் பாதுகாக்க ஒன்றிய, மாநில  அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தீபாவளிக்கு 50 நாட்கள் இருக்கும் போதே கடந்த காலங்களில் இரவு பகலாக ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழிலில் மின்னொளியில் பணிகள் நடைபெறும். வியா பாரிகள் ஒரு பக்கம் கொள்முதல் செய்வார்கள். இன்னொரு பக்கம் உள்ளூர் மக்களும் ஏராள மான சட்டைகளை குறைந்த விலைக்கு  வாங்கிச் செல்வார்கள்.   மதுரை போன்ற பெரிய நகரங் களில் உள்ள ஜவுளிக்கடைகளில் விற்கப்படும் ஆயத்த ஆடைகள் பெரும்பாலும் நத்தத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் தான்.  பொருளாதார மந்தத்தில் ஏற்பட்ட விலை வாசி உயர்வு, கொரோனா தாக்குதல், ஜி.எஸ்.டி வரி விதிப்பு என தொடர் தாக்குத லால் இந்த தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற நிலையில் இந்த தொழில் நலி வுற்று ஆண்டுக்காண்டு வளர்ச்சிக்கு பதிலாக தேய்ந்து வருகிறது. இதனால் இந்த தொழி லை நம்பிய வியாபாரிகள், தொழிலாளர்களும் பெரும் இழப்பை சந்திப்பதால் வேறு தொழிலை தேடிச்செல்கிறார்கள். 

ஆடைகளை  கொள்முதல் செய்ய ஆள் இல்லை

இதுகுறித்து கட்டிங் மாஸ்டர் சம்சுதீன் என்பவர் கூறுகையில், இப்போது தொழில் சரியாக இல்லை. பொருளாதார வீழ்ச்சி ஒன்று. அதனால் விலைவாசி ஏற்றம். வெளியூரி லிருந்து வியாபாரிகள் யாரும் வந்து கொள்முதல் செய்யவில்லை. கிட்டத்தட்ட 4500 தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள். இந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து வந்து இப்போது பெரும்  நெருக்கடியில் இருக்கிறது. இதற்கு காரணம் விலைவாசி ஏற்றம். அன்றைக்கு ரூ.1.50க்கு வாங்கிய நூல் இன்றைக்கு ரூ.4.50க்கு விற்கிறது. ஒன்றே முக்கால் ரூபாய்க்கு விற்ற அட்டை இன்றைக்கு ரூ.5க்கு விற்கிறது. ரூ.3க்கு விற்ற ஸ்பான்ஜ் 4 ரூபாய்க்கு விற்கிறது. இந்த ஆயத்த ஆடையில் இவை  எல்லாம் வைக்க வேண்டும். இந்த தொழி லாளர்களுக்கு கூலியும் கொடுக்கவேண்டும்.  

அன்றைக்கு  விற்ற விலைக்கு இன்றைக்கு இந்த சட்டைகளை விற்க வாய்ப்பில்லை. 3  ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்த வேலை க்கும் இப்போது செய்கிற வேலைக்கும் வித்தி யாசம் இருக்கிறது. மூன்றில் ஒரு பங்கு வேலை கூட இப்போது இல்லை. தீபாவளிக்கு 50 நாட்கள் இருக்கும் போது இரவு பகலாக கண்  விழித்து வேலை செய்வோம். அப்போது குறை கள் இல்லாமல் நிறைவு செய்து கொடுக்க முடியும். இன்றைக்கு ஆயத்த ஆடைகளை தயார் செய்து வைத்திருக்கிறோம். ஆனால் வாங்க ஆள் இல்லை. அன்றைக்கு ரூ.150க்கு விற்ற சட்டை இன்றைக்கு ரூ.250க்கு விற்க வேண்டியுள்ளது. மொத்த வியாபாரிகளான எங்களிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்து  அவர்களும் சென்று விற்க வேண்டும். அப்படி விற்கும் போது அதற்கு தகுந்த லாபம் அவர் களுக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இந்த ஆயத்த ஆடை தயாரிப்பில்  நத்தத்திற்கு என்று  ஒரு தனி பங்களிப்பு உள்ளது. ஆனால் இப்போது வரை தைய்த்து வைத்த சட்டைகள் எல்லாம் விற்காமல் தேக்கத்தில்தான் உள்ளன. இரவு ஒரு மணிக்கு துணி வாங்க  வந்தால் கூட கடையை திறந்து வைத்திருப்போம். வியா பாரம் நடக்கும். இப்போது காலை 10 மணிக்கு வந்து வேலை செய்தால் மாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு போய்விடுகிறோம். 8 மணிக்கு கடையை பூட்டி விடுகிறோம். பொரு ளாதார வீழ்ச்சி காரணமாக இன்றைக்கு எங்க ளுக்கு போதிய அளவில் வேலை ஆர்டர் இல்லை. 4500 தொழிலாளர்கள் இன்னமும் இந்த தொழிலை நம்பி இருக்கிறார்கள் என்று  சம்சுதீன் தெரிவித்தார். 

சில்லறை வியாபாரம் கூட நடப்பதில்லை

தொழிலாளி ஹக்கீம் என்பவர் தெரிவிக்கை யில், முன்பு ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து இங்கு வியாபாரிகள் வந்து சட்டைகளை கொள்முதல் செய்வார்கள். இப்போது நாம் வியாபாரிகளை தேடிச் சென்று தர வேண்டியுள்ளது. ஏற்கனவே தயாரித்து வைத்த ஸ்டாக் அப்படியே இருக் கிறது. மக்களிடம் பொருளாதார மந்தம் இருப்ப தால் சில்லறை வியாபாரம் கூட நடப்பதில்லை.  இந்த நிலையில் ஜி.எஸ்.டி. உயர்வு, மின்கட்ட ணம் உயரப் போகிறது என்று சொல்லியிருக் கிறார்கள். அதனால் முதலீடு முடக்கத்தில் இருக்கிறது என்று ஹக்கீம் தெரிவித்தார். 

தொழிலை பாதுகாக்க  தொழில் பூங்கா அமைத்திடுக!

சிறுதொழில் உரிமையாளர்  ஜப்பார் என்பவர் கூறுகையில், ஆயத்த ஆடைகள் ஒவ்வொரு வருடமும் வளர்ச்சியை நோக்கு செல்லும் என்று பார்த்தால் வருடத்திற்கு வருடம் தேய்மானமாகத் தான் இருக்கிறது. எந்த வகையிலும் எங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்கான சூழ்நிலை இல்லை. கடந்த ஆண்டு 100 கம்பெனிகள் இருந்தது. இந்த வருடம் 60 கம்பெனிகள் தான்  இருக்கின்றன. இந்த தொழிலில் நெருக்கடி யை தாக்குப்பிடிக்க முடியாமல் வேறு வேறு தொழிலுக்கு தொழிலாளர்கள் சென்று விட்டார்கள். 4500 தொழிலாளர்கள் வேலை செய்த நிலையில் இன்றைக்கு வெறும் 400 பேர் தான் வேலை செய்கிறார்கள். உற்பத்திப் பற்றாக்குறை உள்ளது. உற்பத்தி செய்தாலும் அதனை விற்க முடியவில்லை. விலைவாசி அதிகரித்துள்ளது. வாடிக்கையாக வரும் வியாபாரிகளிடம் கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்க முடியவில்லை. தளவாட சாமான்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சட்டை க்கு ரூ.25 கூடுதல் ஆகிறது. அந்த விலையை உயர்ந்த வியாபாரிகள் ஏற்க மறுக்கிறார்கள். கடந்த ஆண்டு 16 தொழிலாளர்களை வைத்து  வேலை செய்தேன்.

இன்றைக்கு 8 பேர் தான் வேலை செய்கிறார்கள். நிறைய பேர் இந்த கம் பெனியை இழுத்து மூடிவிட்டு போய்விட்டார் கள். இந்த தொழிலை பாதுகாக்க தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டும் கோரிக்கை வைக்கிறோம். ஆனால்  மாநில அரசு முன்வரவில்லை. இந்த தொழி லையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க தொழில் பூங்கா அமைக்க வேண்டும். இந்த  நிலையில் மின் கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. நாங்கள் இங்கு சிறு தொழில்  நடத்தி வருகிறோம். இந்த அறிவிப்பால் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்க உள்ளோம். எனவே மின் கட்டணம் உயர்வை ரத்து செய்ய மாநில அரசு முன்வரவேண்டும். இந்த ஆயத்த ஆடை கள் நத்தத்தில் மட்டுமல்லாமல் பிற மாவட்டங் களிலும், பிற மாநிலங்களிலும் கூட செய்ய  ஆரம்பித்திருக்கிறார்கள். நத்தத்தை பொறுத்த வரை குறைவான விலைக்கு ஆர்டரின் பேரில் செய்து தருகிறோம். இந்நிலையில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் எங்களுக்கு பழைய விலையில் கொடுக்க முடியாத நிலையில் உள்ளோம். உற்பத்தி குறைவாகவும் உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் விற்க முடி யாமல் தேக்க நிலையில் உள்ளது. ஒவ்வொரு கடையிலும் சர்வ சாதாரணமாக 10 ஆயிரம் சட்டை உற்பத்தி செய்து விற்று வந்தோம். அரசு ஆயத்த ஆடைகள் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  

இலமு, திண்டுக்கல்

 

 


 

;