tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ரூ.300 கோடியிலான அரசு நிலம் மீட்பு

சென்னை: தமிழகத்தில் குத்தகை காலம் முடி வடைந்தும், சில தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் அரசு நிலங்களை காலி செய்யாமல் அவற்றை பயன் படுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிலங்களை மீட்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னையின் ஆலந்தூரில் குத்தகை  காலம் முடிந்து நிலத்தை காலி செய்யாமல் அதில் ஓட்டல் அமைத்து பயன்படுத்தி வந்த நிலத்தை அதிகாரி கள் மீட்டுள்ளனர். ஆலந்தூரில் பிரபலமான தனியார் ஓட்டல் 15 கிரவுண்டு அரசு நிலத்தில் செயல்பட்டு வந்தது.  குத்தகை காலம் முடிந்து அந்த ஓட்டல் செயல்பட்டு வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத் தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நிலத்தை அரசு கை யகப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யர் உத்தரவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தனியார் ஓட்டல் (சரவணபவன்) அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற  அதிகாரிகள், ஓட்டலில் இருந்த ஊழியர்களை வெளி யேற்றினர்.  மேலும், ஓட்டலின் பெயர் பலகையை அகற்றிய அதி காரிகள் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும், ஓட்டல் செயல்பட்டு வந்த 15 கிரவுண்டு அரசு நிலத்தை மீட்ட னர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.300 கோடி என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

‘விரைவில் எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில்’

கோயம்புத்தூர்: குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பின்னர், தமிழ்நாட்டில் முதல்முறையாக மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சி.பி. ராதாகிருஷ்ணன். பின்னர், கோவை மாவட்ட சிறு தொழில்களின் சங்கமான கொடிசியா சார்பில், பீளமேடு  பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், “எர்ணாகுளம் - பெங்களூரு வந்தே பாரத் ரயில் விரைவில்  அறிவிக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு நகரங்களில் நின்று செல்லும்.  ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கோவை வர தினந்தோறும் ரயில் சேவை அறிமுகமாக உள்ளது” என்றார்.  

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 3 துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை  கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறை முகங்களில் 2 ஆம் எண் புயல் கூண்டு நீடிக்கிறது.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: வட கிழக்கு பருவமழையை யொட்டி அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை  பல்வேறு அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளது. தொலைதூர பேருந் துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயம் கும்போது கவனத்தோடு இயக்க வேண்டும். தண்ணீர் குறைவாக இருப்பதாகக் கூறி பய ணிகளே இயக்கச் சொன் னாலும், மாற்று வழி களையே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.  பேருந்துகளில் முகப்பு விளக்கு சரி யாக ஒளிர்கிறதா, சாலைகளில் மின்கம்பி,  மரங்கள் விழுந்து உள்ளதா என கண்கா ணிக்க வேண்டும். பணி மனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடி கால்கள் சரிவர இருக்கின் றனவா என சரிபார்க்க  வேண்டும். பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவது, சாய்வு  இருக்கைகள் சரிவர  இயங்காதது போன்ற  புகார்கள் வந்தால், கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். கடலோரச் சாலை  பேருந்து ஓட்டுநர்கள் வானிலை அறிவுறுத்தல் களை முறையாக கேட்ட றிந்து கொள்ள வேண் டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐஐடி பேராசிரியர்கள் 3 பேருக்கு ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருது

சென்னை, அக்.28- சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 பேராசிரியர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் ராஷ்டிரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப திறன்களை மேம்படுத்திய சிறந்த  சாதனைகள் மற்றும் வாழ்நாள் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில்  ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் வழங்கப்படு கிறது. இந்த விருது விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவா-சாந்தி ஸ்வா ரப் பாட்நகர், விஞ்ஞான் டீம் ஆகிய பிரிவு களின் கீழ் வழங்கப்படுகிறது. சென்னை ஐஐடியின் வேதியியல் துறை யைச் சேர்ந்த பிரதீப், விஞ்ஞான் ஸ்ரீ விருதுக்கும்,  எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறையைச் சேர்ந்த மோகனசங்கர் சிவப்பிரகாசம் மற்றும்  கணினி அறிவியல் பொறியியல் துறையைச் சேர்ந்த ஸ்வேதா பிரேம் அகர்வால், விஞ்ஞான்  யுவா-சாந்தி ஸ்வாரப் பட்நகர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் இடிக்கப்படாது!

சென்னை: வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டிஷ் கால கட்டடங்கள் இடிக்கப்படாது  என தெற்கு ரயில்வே உறுதி அளித்துள்ளது.  மேலும், “வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டிஷ் காலத்து பங்களாக்கள் இடிக் கப்படவுள்ளதாகச் சமூக  வலைதளங்களில் வெளி யான தகவல்களைத் தொ டர்ந்து, தெற்கு ரயில்வே  நிர்வாகம் அவற்றைப் பாது காப்பதாகவும், அவை  இடிக்கப்படாது” என்றும்  உறுதி அளித்துள்ளது. நுங் கம்பாக்கத்தில் உள்ள  ஒரு ரயில்வே பங்களா இடிக் கப்படவுள்ளதாகச் சமூக  ஊடகங்களில் பரவியது.  இது குறித்து விளக்க மளித்த தெற்கு ரயில்வே யின் மூத்த அதிகாரி ஒருவர்,  “எந்தவொரு நோக்கத்திற் காகவும், எந்தவொரு கட்ட டமும் இடிக்கப்படவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரி வித்துள்ளார்.