tamilnadu

img

சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சித்தா பல்கலைக்கழகத்திற்கான ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில கேள்விகள் கேட்டு அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பினார். அதற்கும் பதிலளித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்றும், சித்தா பல்கலைக்கழகத்திற்காக மாதவரம் பகுதியில் நில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கியதும் புதிய பாடப் பிரிவு துவங்கப்படும். சித்த மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லை என்றார் அமைச்சர்.

சென்னை, நவ. 17- மருத்துவம் படித்த அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் என்பது சாத்தியம் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனையில், மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்திய மருத்துவம் மற்றும்  ஓமியோபதி துறையில் பட்டப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டு,  யோகா மற்றும் இயற்கை மருத்துவம் பட்டம்  மேற்படிப்பு இட ஒதுக்கீடு ஆணையை வழங்கினர். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி என ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட் டின் கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள்  259ம் உள்ளன என்றார். அதேபோல் 26 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,660 இடங்கள் உள்ளன,

அதில்  762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களா கவும், நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்க ளும் உள்ளன. மேலும், இதுவரை பெறப்பட்ட அரசு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 2,756. அதில் தகுதியான விண்ணப்பங்கள் 2,573. தரவரிசை பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 580. நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 878 விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் 812. நிர்வாக ஒதுக்கீட்டிற்கு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் 474 என்றார். யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பிற்குப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 282, தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 281. நுழைவு தேர்வில் கலந்து கொண்டவர்களின் எண் ணிக்கை 270. நுழைவுத் தேர்வில் பெற்ற  மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய் விற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 93 என்றும் அவர் தெரி வித்தார். சுகாதாரத்துறையில் வெளிப்படைத் தன்மையுடன் விருப்பத்திற்கேற்ப பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. சுகாதாரத்துறை 136ஆவது அறிவிப்பு களை அறிவித்துள்ளது. இதன் செயல் பாடுகள் புத்தகமாக வெளியிடப்படும் என்றுகூறினார்.