கடலூரில் அரசு காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
கடலூர், அக்.26- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை கடலூரில் நடைபெற்றது. ஆர்.சிவக்குமார் கொடியேற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் இராம.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் ஆர்.காந்தி அஞ்சலித் தீர்மானத்தை முன்மொழிந்தார். இணைச்செயலாளர் எம்.எஸ்.ஆதி சங்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டைத் துவக்கி வைத்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாநில செயலாளர் கோ.பழனி பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் வேலை அறிக்கையையும் பொருளாளர் டி.வெங்கடேசன் நிதிநிலை அறிக்கையை யும் சமர்பித்தனர். குடியிருப்போர் சங்கத்தின் சிறப்புத் தலை வர் எம்.மருதவாணன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.பழனிவேல், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் என்.காசிநாதன், அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அனுசுயா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைத்தலைவர்கள் எல்.அரி கிருஷ்ணன், டி.ரவிச்சந்திரன், கவியரசு, பொற்செழியன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.மகாலிங்கம் நிறைவுரை யாற்றினார். பாபு நன்றி கூறினார். தீர்மானங்கள் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்டோருக்குக் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை எண் 115, 139, 152 ஐ ரத்து செய்ய வேண்டும். சாலை பணியாளர் களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
