tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்றுக! கேங்மேன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றுக!  கேங்மேன் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக். 7-  கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய 6 சதவிகித ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு ஊர் மாற்றம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், செவ்வாய்க்கிழமை, தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, திருச்சி மண்டல அளவிலான காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திருச்சி மண்டலச் செயலாளர் அகஸ்டின், வட்டச் செயலாளர்கள் புதுக்கோட்டை நடராஜன், திண்டுக்கல் திருமலைசாமி, திருச்சி மாநகர் பழனியாண்டி, பெரம்பலூர் இளங்கோவன், வட்டத் தலைவர்கள் திருச்சி நடராஜன், புதுக்கோட்டை சித்தையன், திண்டுக்கல் மாரிமுத்து, பொருளாளர்கள் புதுக்கோட்டை விஜயகுமார், பெரம்பலூர் பாலகிருஷ்ணன், திண்டுக்கல் சசிரேகா, பெரம்பலூர் துணைத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.  தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  தஞ்சாவூர்   தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், தஞ்சாவூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டலச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். திட்டத் தலைவர்கள் ஏ. அதிதூத மைக்கேல் ராஜ் (தஞ்சாவூர்), கலைச்செல்வன் (நாகப்பட்டினம்), சகாயராஜ் (திருவையாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் கண்ணன், மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மின்வாரிய ஓய்வூதியர்கள் சங்கம் மாநிலச் செயலாளர் கோவிந்தராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்டச் செயலாளர்கள் பி.காணிக்கை ராஜ், வெற்றிவேல், பொருளாளர்கள் மணிவண்ணன், குணசேகரன் முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.