மாமல்லபுரம்,பிப்.19- பிரான்ஸ் நாட்டிலுள்ள கடற்கரை நகரமான சாம்பிரிவ் நகரப்பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்டியான் (65), மிஷேல் (63). இருவரும் முதல் முறை யாக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து ள்ளனர். இதில் கிருஷ்டியான் அங்கு சொந்தமாக மாட்டு பண்ணை வைத்துள் ்ளார். மிஷேல் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளார். அங்குள்ள அட்லாண் டிக் கடலில் படகில் மீன்பிடிக்க சென்று விடுவார்களாம். இவர்கள் இருவரும் கடந்த 30 வருடங்களாக தங்களுக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்கும் தொழில் செய்து வருவார்களாம். இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ள இவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க மாமல்லபுரம் மீன வர்கள் சீனிவாசன், பசுபதி ஆகியோ ருடன் கடலுக்கு சென்று வலைவீசி மீன்பிடித்து கரை திரும்பினர்.