tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரி களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, கல்லூரிக் குள் அடியெடுத்து வைக்கும் முதலாம் ஆண்டு மாணவர் களுக்கான வகுப்புகள் திங்கட்கிழமை முதல் தொடங்கின. பள்ளியில் இருந்து விடைபெற்று, கல்லூரிக்குள் மிகுந்த உற்சாகத்துடன் மாணவ, மாணவிகள் வந்துள்ளனர். பல்வேறு கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களை வர வேற்க கல்லூரி நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பூக்களை  பரிசளித்து மூத்த மாணவ, மாணவிகள் வரவேற்றனர்.

17 சதவீதம் கூடுதலாக மழை

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 17 சதவீதம் கூடுதலாக பெய்து உள்ளது. இயல்பான நிலையில் 5.8 மி.மீ மழை பொழியும்  நிலையில் ஜூன் 30 வரை 59.3 மி.மீ மழை பொழிந் துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை திங்க ளன்று வரை இயல்பை விட 14 சதவீதம் கூடுதலாக பதிவாகி யுள்ளது. சென்னையில் இயல்பாக 64.6 மி.மீ. மழை பெய்யும் நிலையில், 73.8 மி.மீ மழை பொழிந்துள்ளது.

வாழ்நாள் சான்றிதழ் தேவையில்லை

சென்னை: பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் பெற வேண்டாம் என மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தர விட்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத்திறனா ளிகளுக்கு 6 வகையான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம்  தரவுகள் சரிபார்த்து, தகுதியான பயனாளிகளுக்கு உதவித் தொகை தரப்படுகிறது.

‘எந்த கொம்பனாலும் முடியாது’

உளுந்தூர்பேட்டை:  தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான்  என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறிவரும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் ‘எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீ கரம் செய்ய முடியாது’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

வெடிகுண்டு மிரட்டல் வழக்குகள் மாற்றம்

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி உள்பட பொது இடங்களுக்கு கடந்த ஓராண்டாக வந்த 20-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த அனைத்து வழக்குகளும் தீவிரவாத தடுப்புப் பிரிவு (சென்னை)-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

நீதிமன்றம் முடிவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண மத்தி யஸ்தரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன்

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு  மீதான மேல்முறையீட்டு சொந்த பிணைத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஜெகன் மூர்த்தியை கைது செய்யவும் தடை  விதித்துள்ளது.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.6.50 கோடியில், 245 பள்ளிகளில் சிசிடிவி கேமரா விரைவில் பொருத்தப்படும் என்றும் இதற்காக ஏற்கனவே  டெண்டர் கோரப்பட்டு உள்ளது என்றும் மேயர் பிரியா கூறினார்.

ரயில் பயணிகள் கவனத்திற்கு...

சென்னை: இனிமேல் ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு அட்ட வணையை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பய ணிகள் தங்களது டிக் கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்து கொள்ள ஏதுவாக நிர்வா கம் இந்த முடிவை எடுத்துள்ளது.