தந்தை பெரியார் ஒரு முறை (1936) ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது சோவியத் ஒன்றியத்தில் சுமார் மூன்று மாத காலம் தங்கியிருந்தார். பிறகு, நாடு திரும்பிய அவரை பத்திரிகை ஜாம்பவான்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு சந்தித் தனர். அதில் ஒருவர், மதிப்பெண் என்பது எது? மதிப்பெண் முறையில் தரம் எது? என்று வினவினார். ‘மார்க்’ என்பது அறிவை அளக்கும் கருவி அல்ல. பரீட்சையில் மார்க் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத் துக்கும், நாணயத்துக்கும், நன்னடத்தை க்கும், கெட்டிக் காரத்தனத்துக்கும் என்ன சம்பந்தம்? உள்ளபடி சொல்கிறேன். இந்த நாட்டில்தான் மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கிறது.
மற்ற நாடுகளில் இந்த முறையே கிடை யாது என்று பளிச்சென்று பதிலளித்த பெரி யாரின் பாரம்பரியமும், பொதுவுடமை தத்து வமும் தழைத்தோங்கும் தமிழ்நாடு, ‘நீட்’ தேர்வு வேண்டவே வேண்டாம் என்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுதினால்தான் தேசிய அளவிலான கல்வி நிறுவ னங்களில் சேர முடியும். உயர் கல்வி யில் சர்வதேசத்திற்கு தரம் உயர முடியும். அதனால், மத்திய கல்வி வாரிய பாடத்திட் டம் அவசியமானது என்றும் சிலர் விதண்டா வாதம் செய்கின்றனர். அவர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 1980-களில் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. மேலும் பல மாநிலங்களில் மருத் துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இடமும் மிக மிக குறைவாக இருந்தது. இதனால் நாடு முழுவதும் மருத்துவர் பற்றா க்குறை நிலவியது. பிறகு 1985 ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தின் அறிவுறு த்தலால் ஒவ்வொரு மாநிலமும் தங்க ளது மருத்துவக் கல்லூரிகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட விழுக்காடு மருத்துவ இடங் களை ஒன்றிய அரசுக்கு கொடுத்தது. அதன்மூலம் அகில இந்திய தொகுப்பு (ஆல் இந்தியா கோட்டா) உருவாக்கப் பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மருத்துவ மாண வர் சேர்க்கையில் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒன்றிய அரசு மூலம் 15 விழுக்காடு மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள 85 விழுக்காடு அந்தந்த மாநில அரசுகள் உரிய இட ஒதுக்கீட்டில் அடிப்ப டையிலும் மாநிலப் பாடத் திட்டத்தின் மூல மும் நிரப்பிக் கொண்டன. ஆனாலும், சமூக நீதியின் தாயக மான தமிழ்நாட்டில், 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தது. இதன் மூலமே கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் பலரும் இட ஒதுக்கீட்டில் மருத்துவராக முடிந்தது. அதேபோன்று, அரசுப் பள்ளி களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் பலரும் மருத்துவராகி உலக அளவில் நிபுணத்துவம் பெற்று தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது.
சேவைக்கு வைக்கும் வேட்டு!
நீட் தேர்வு வருவதற்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்து வம் படித்தவர்கள் பெரும்பாலும் கிராமப்பு றத்தைச் பின்புலமாக கொண்டவர்கள். மலைப் பிரதேசமாக இருந்தாலும், அடர்ந்த வனம், காப்புக் காடுகள் போன்ற போக்கு வரத்து வசதி குறைந்த, வசதியில்லாத குக்கிராமங்களிலும் தங்கி மருத்துவ சேவை செய்கின்றனர். அதே நேரத்தில், லட்சம் லட்சமாக பணத்தை கறக்கும் சிபிஎஸ்சி பின்புலத்தி லிருந்தும் தனியார் பயிற்சி மையங்களில் இருந்தும் நீட் தேர்வில் இடம் கிடைத்து மருத்துவம் முடிப்பவர்கள் பெரும்பாலும் வசதிபடைத்த குடும்பங்களில் இருந்து வரு கின்றனர். இவர்களது சேவை கிராமப்பு றங்களும் அல்ல. இலவச மருத்துவமும் அல்ல. ஏழை-எளிய மக்களிடம் காசை கரக்கும் கார்ப்பரேட் மருத்துவம னைகள். அங்கேயே பணியாற்ற விரும்பு கின்றவர்கள்.
காளான்களை போலும் புற்றீசல் போல வும் முளைத்து வரும் தனியார் நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டி பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு மருத்து வப்படிப்பு எட்டாக்கனியாக மாறி விடு கிறது. இதனால் மாநில கல்வி வாரி யத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தங்க ளது கல்விமுறை மீதே நம்பிக்கை இழக்கி றார்கள். அது மட்டுமல்ல, கிராமப்புற, பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படு த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவு கலைந்து விடுகிறது. பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் குலைத்துவிட்டது நீட்தேர்வு. உதாரணம், நமது மாநில கல்வி வாரி யத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு தமிழ்நாட் டில் உயர் கல்வி படித்த மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 93 ஆயிரம். அதுவே, நீட் அறிமுகமான பிறகு, 7 லட்சத்து 79 ஆயிரமாக சரிந்து விட்டது.
2010-11ஆம் ஆண்டில், மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் பயின்ற 2,300 மாண வர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அன்றைக்கு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த எண்ணிக்கை வெறும் 14 தான். ஆனால் நீட்தேர்வு திணிக் கப்பட்ட பிறகு அனைத்தும் தலை கீழாக மாறிவிட்டது. தமிழ் வழியில் படித்த வர்கள் எண்ணிக்கையும் கிராமப்புறங் களில் படிக்கும் மாணவர் எண்ணிக் கையும் அடியோடு சரிந்து விட்டது. சிபி எஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 1604 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூ ரிகளில் இடம் கிடைத்தது.
தாய்மொழி வழி மாநில கல்வி வாரிய பாடத்திட்டத்தை சீர்குலைத்து கார்ப்பரேட் முதலாளிகளிடம் தாரைவார்க்க சதித் திட்டம் நடந்து வருகிறது. அதை அனு மதித்துவிட்டால் இனி உயர் கல்வி மாண வர் சேர்க்கையில் மாநிலப் பட்டியல் என்று ஒன்று இருக்காது. மாநிலப் பள்ளிக் கல்வி முறையும் இருக்காது. அனைத்தும் ஒரே பட்டியலாகிடும் ஒரே பாடத் திட்டமாக மாறிவிடும். எனவே மாணவர்கள், பெற்றோர், கல்வி யாளர்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப் புகள் அனைவரையும் இணைந்து, நீட் தேர்வை ரத்து செய்யச் செய்வது மட்டு மின்றி மாநில பள்ளிக் கல்வியையும் பாது காப்பதே தமிழகத்தின் இலக்காக அமைய வேண்டும்.
சி.ஸ்ரீராமுலு