தேனி, செப்.21 - பெரியகுளத்தில் பெண் கள், குழந்தைகள் கூடும் இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மது பார்களை அகற்ற வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய காத்திருப்பு போராட் டம் வெற்றி அடைந்தது. இதன் விளைவாக, ஒரு மாதத்தில் மதுபார்களை அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படும் என கலால் துணை ஆட்சியர் ரவிச் சந்திரன் உறுதியளித்துள் ளார். தேனி மாவட்டம் பெரிய குளம் நகரில் மூன்றாந்தல் பேருந்து நிறுத்தம், மருத்துவ மனை, வங்கி இருக்கும் இடங்களில் 3 தனியார் மது பானக் கடை மற்றும் பார்கள் இயக்கி வருகின்றன. இக்கடை கள் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும், மாணவ - மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. இந்த சாலையில் இதுவரை 19 விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயமடைந்துள்ளனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே தனியார் மது பார்களை உட னடியாக அகற்ற வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து போராட்டம் நடை பெற்று வருகிறது. இந்நிலை யில், மாவட்ட நிர்வாகம் தனி யார் மதுபார்களை அகற்ற முன்வராத நிலையில் மார்க்சி ஸ்ட் கட்சி சார்பில் காத்திருக் கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தது.
காத்திருப்பு போராட்டம்
னன்று பெரியகுளம் மூன் றாந்தல் பேருந்து நிறுத்தம் அருகே காத்திருப்பு போராட் டம் தொடங்கியது. போராட்டத் திற்கு தென்கரை கிளைச் செய லாளர் ஜி.சுப்பிரமணி, மாதர் சங்க தென்கரை கிளைச் செயலாளர் எம்.சாந்தி ஆகி யோர் தலைமை வகித்தனர். ஸ்டேட் பாங்க் காலனி செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், வடகரை செயலாளர் பி.மணி கண்டன், அழகர்சாமிபுரம் செயலாளர் என்.எச்.மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான ஏ.லாசர் சிறப்புரை யாற்றினார். விடுதலை சிறுத் தைகள் கட்சியின் திண்டுக்கல் மண்டல செயலாளர் இரா.தமிழ்வாணன், திராவிடர் கழக பொருளாளர் அன்புக்கரசன், நகர் வளர்ச்சி பேரவை செய லாளர் மணி கார்த்திக் ஆகி யோர் போராட்டத்தை ஆத ரித்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.வெண்மணி, பெரிய குளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், மாவட்டக் குழு, தாலுகா குழு உறுப்பி னர்கள் மற்றும் பெரியகுளம் நகர்மன்ற உறுப்பினர் எம்.மதன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை
இதுதொடர்பாக பெரிய குளம் கோட்டாட்சியர் முத்து மாதவன் போராட்டத்தில் ஈடு பட்ட தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப் போது, மதுபார்களை இட மாற்றம் செய்ய மாவட்ட நிர்வா கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், கலால் துறை முடிவு எடுக்க வேண்டியுள்ள தாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொள்ளாத தலைவர் கள், தொடர் போராட்டம் நடை பெறும் என தெரிவித்தனர். கலால் அதிகாரி பேச்சுவார்த்தை அதனைத் தொடர்ந்து மாவட்ட கலால் பிரிவு துணை ஆட்சியர் ரவிச்சந்திரன், போ ராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் எம்.வி. முருகன் ஆகியோரை அழைத் துப் பேசினார்.அதில், “தனியார் மதுபார்களை இடமாற்றம் செய்ய ஒரு மாதத்தில் நட வடிக்கை மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார். பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.