சம வேலைக்கு சம ஊதியம் வழங்குக! சிஐடியு அரியலூர் மாவட்ட மாநாடு கோரிக்கை
யலூரில் சிஐடியு-வின் ஒன்பதாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டிற்கு சிஐடியு மாநில செயலாளர் தேவமணி, மாநில துணைத்தலைவர் எஸ்.ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், வி.தொ.ச சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, மாவட்டப் பொருளாளர் கே.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் எம்.சந்தானம் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் வி.ராஜாமணி அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாநாட்டில் செங்கொடியை மாவட்ட துணைத் தலைவர் சிற்றம்பலம் ஏற்றி வைத்தார். மாநாட்டில் தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும். கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களை பாதுகாத்திட வேண்டும். பொதுத்துறைகளை பாதுகாத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாவட்டத் தலைவராக க. சகுந்தலா, செயலாளராக பி.துரைசாமி, பொருளாளராக ஆர்.ரவீந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 துணைத் தலைவர்களும், 5 துணைச் செயலாளர்களும், 23 மாவட்டக் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் அருண்பாண்டியன் நன்றி தெரிவித்தார்.