முதலமைச்சருக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ கடிதம்
1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலியை உயர்த்தி அரசாணை வெளியிட்டு வறுமை நிலையை தவிர்த்திட வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்கு உடனடியாக தினக்கூலி ரூ.600- என்று அரசாணை வெளியிட வேண்டும்
சென்னை, மார்ச் 15- விவசாயத் தொழிலாளர்களுக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும். குறைந்த பட்ச கூலியை உயர்த்தி, நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை சட்டமாக இயற்றி முழுமை யாக செயல்படுத்திட 2023-2024 நிதிநிலை அறிக் கையில் அறிவிப்பு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சட்டமன்றக்குழு துணைத்தலைவரும் அகில இந்திய விவசாயத்தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான எம். சின்னதுரை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சருக்கு அவர் அனுப்பிய கடி தம் வருமாறு: மார்ச் 20-ல் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டத் தொடர் துவங்க அறிவிப்பு வெளியிடப்பட் டுள்ளது. அரசின் கொள்கைகள், புதிய திட்டங் கள், பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் விவாதித்து நிறை வேற்றப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் வசிக்கும் ஒரு கோடிக்கும் மேலான விவசாயத்தொழிலாளர்களின் முக்கி யமான கோரிக்கைகளை இணைத்து அரசு பரிசீலித்து நிறைவேற்ற முதல்வரின் கவ னத்திற்கு கொண்டு வருகிறேன். நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் துறை வாரியான மானிய கோரிக்கைகளை நிறை வேற்ற அந்தந்த துறைகளைச் சார்ந்த வல்லு நர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் என்று பல்வேறு தரப்பின ரிடமும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி கருத்தை அறிந்து பட்ஜெட் தயாரிக்கும் நடை முறை வழக்கம் போல் இந்த ஆண்டும் நடை பெற்று வருகிறது.
கருத்துக்கேட்பு நடத்தி, திட்ட மதிப்பீடு செய்திடுக!
தமிழ் சமுதாயத்தில் அடித்தட்டில் வாழ்ந்து வரும் கிராமப்புற பாட்டாளிகள் நிலத்தை நம்பி வாழும் மக்கள், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதிய புறக்கணிப்புகள், அடிமை வாழ்வு போன்ற வாழ்வியல் சுமைகளுடன் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கோடிக்கும் மேலான விவசாயத்தொழிலாளர் களின் வளர்ச்சித் திட்டங்கள், சமூக பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு குறித்து விவ சாயத் தொழிலாளர்களிடையே செயல்படும் அமைப்புகளிடம் தமிழ்நாடு அரசு குறைந்த பட்சம் கருத்துக்கேட்பு நடத்தி, திட்ட மதிப்பீடு மற்றும் அறிவிப்புகள் செய்வது என்பது பய னளித்திடும் என நம்புகிறோம். ஊரக வளர்ச்சி, வேளாண்மை, வருவாய் மற்றும் சமூக நலத்துறைகள் என விவசாயத் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சேவைகள் பல்வேறு துறைகளை சார்ந்துள்ளன. விவசாயத்தொழிலாளர்களுக் கான வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், சேவைகள் என பல்வேறு ஒதுக்கீடு வழங்கிய நிலையிலும் வளர்ச்சியற்ற பின் தங்கிய சமூக மாகவே விவசாயத் தொழிலாளர்கள் உள்ள னர். விவசாயத் தொழிலாளர்களுக்கு முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்திய, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் நலச் சட்டம் -2006 போன்ற சட்ட வடிவிலான தனித் துறையை உருவாக்கி சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்திட வலியுறுத்து கிறோம்.
‘தினக்கூலி ரூ.600’ அரசாணை வெளியிடுக!
2018 ஆம் ஆண்டுக்கு பிறகு விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட் டத்தின்படி, தினக்கூலி உயர்த்தி அறிவிப்பு செய்யப்படவில்லை. இதன் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்திலும், விவசாய வேலைகளி லும் கிடைக்கும் கூலியும் உயரவில்லை, தின மும் உயரும் கடுமையான விலைவாசி காரண மாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள், காய்கறிகள், கல்வி, மருத்துவம், மூத்த குடி மக்கள் பராமரிப்பு ஆகியவற்றை நிறைவேற்ற முடியாமல் வறுமையில் உழல்கின்றனர். ஆகவே 1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலியை உயர்த்தி அரசாணை வெளி யிட்டு வறுமை நிலையை தவிர்த்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனவும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உடனடியாக தினக்கூலி ரூ.600- என்று அரசாணை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக் கின்ற மக்களில் 38% பேர் ஏழைகளாகவும், வேலைவாய்ப்பின்றியும் அவதிப்பட்டனர். அம் மக்களின் நலனை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டுமென விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு வகை யான இயக்கங்களை நடத்தி வலியுறுத்தப் பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2021-இல் புதிதாக பொறுப்பேற்ற திமுக தலைமையி லான அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கை யில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சட்டப்பேரவையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுமென அறிவிப்பு வெளியிட்டது பலதரப்பட்ட மக்களின் மிகுந்த வரவேற்பை பெற்றது . திறனற்றவர்கள், பாதி திறன் உடையவர்கள், மற்றும் முழு திறன் உடையவர்கள் என மூன்றாக வகைப்படுத்தி ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட முன்வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்கள், 14 மாநகராட்சியில் தலா 1 மண்டலம், 7 நக ராட்சிகள், 37 பேரூராட்சிகளில் முதல் கட்டமாக நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் துவங்கப் பட்டது. பின்பு தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்த நிலை யில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யாதது பெரும் ஏமாற்றத்தை தந்தது. தற்போதும் ஐநூறுக்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் வேளாண்மை சார்ந்த தொழில்களை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர். ஆகையால் தமிழ்நாடு அரசு 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 (ஆயிரம்) கோடி நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நகர்ப்புறங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாது காத்தல், வெள்ள கால மீட்புப் பணிகள், பசுமை யாக்கல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் போன்ற பணிகளை திறம்பட நிறைவேற்றிட நகர்ப்புறக் குடிமக்களுக்கு கொண்டுவந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்திட கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம், குடும்பத்திற்கு 100 நாட்களும், தொழிலாளர்கள் பங்கேற்புடன் ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களை சட்டப் பூர்வமாக நிறைவேற்றி வருவதைப்போன்று, தமிழ்நாடு அரசும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை சட்டமாக இயற்றி தொடர்ந்து செயல்படுத்திட வேண்டுமென வலியுறுத்து கிறோம். ஆகவே மேற்கண்ட கோரிக்கைகளை 2023-2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் விவசாய தொழிலாளர்களின் நலன் கருதி அறிவிப்புகளாக வெளியிட வேண்டுமென விவ சாய தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.