tamilnadu

காட்டாற்று வெள்ளத்தில் யானைக்குட்டி பலி

குழித்துறை, அக்.18- வளிமண்டல மேலடுக்கு  சுழற்ச்சி காரணமாக கன்னி யாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் கோதை யாறு மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு போக்கு வரத்து முற்றிலும் துண்டிக்க பட்டது. இந்நிலையில்  கோல மடக்கு பகுதியில் ஏற்பட்ட  காட்டாற்று வெள்ளத்தில் 4 மாத ஆண் யானைக்குட்டி பலியான நிலையில் அடித்து வரப்பட்டது. மோதி ரமலை அருகே கோதை யாற்றின் கரையில் இந்த  குட்டி யானையின் சடலம் ஒதுங்கியுள்ளது. மலைக் கிராம மக்கள் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்த னர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குட்டி யானையின் உடலை மீட்டு கூராய்வு மேற்காண்டு வனப் பகுதியில் அடக்கம்செய்த னர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

;