tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப் பெருந்தகை கண்டனம்  

சென்னை, செப். 25 - மக்கள் பிரதிநிதியான தன்னை ‘பிச்சைக்காரன்’ என்று எடப்பாடி பழனிசாமி அவமதிப்பு செய்ததற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷமான கருத்து, அரசியலில் எவ்வளவு ஆழமாக சமூக விரோத எண்ணங்கள் புதைந்துள்ளன என்பதையும், உண்மையான சிரமங் களை அறியாத செழிப்பின் அகந்தையையும் வெளிப் படுத்துகிறது” என்று செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலை வர்களின் பாதையில் பயணித்த எடப்பாடி பழனிசாமி இன்று மக்களின் வலிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களை யும் பார்க்க முடியாத அளவுக்கு தூரத்தில் நிற்கிறார் என்றும் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

பெண் ஐஏஎஸ் அதிகாரி மறைவு: முதல்வர் அஞ்சலி

சென்னை, செப். 25 - தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் (56) சென்னை தனியார் மருத்துவமனை யில் புதன்கிழமை (செப்.25) அன்று காலமானார்.  உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக வீட்டிலிருந்தபடியும் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.  இந்நிலையில், சென்னை கொட்டிவாக்கம் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பீலா வெங்கடே சனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான அமுதா, ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் பீலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  பீலா வெங்கடேசன் மறைவுக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. 

நாளை வேளாண் வணிகத் திருவிழா

சென்னை: சென் னையில் செப்.27, 28 தேதிகளில் வேளாண் வணிகத் திருவிழா நடை பெறுகிறது. நந்தம் பாக்கம் வர்த்தக மையத் தில் செப்‌. 27 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைக்கிறார். மேலும், விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். 

அக். 1 வரை மழை வாய்ப்பு

 சென்னை : தமிழ்நாட்டில், செப்டம்பர் 1 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறி வித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின் னலுடன் கூடிய லேசா னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத் தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்  களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொறுப்பு நிர்வாகிகளை மாற்றிய பாஜக

சென்னை: தமிழ கத்தில் சட்டமன்றத் தேர் தல் அடுத்த ஆண்டு நடை பெற உள்ள நிலையில், தமது கட்சிக்கான தேர்தல் பொறுப்பாளராக பைஜயந்த் பாண்டா (தேசிய துணைத் தலை வர்), இணை பொறுப்பாள ராக முரளிதர் மொ ஹோல் (மத்திய இணை யமைச்சர்) ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.

சோனி நிறுவனம் மீது வழக்கு

சென்னை: ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளைய ராஜாவின் பாடல்களை பயன்படுத்திய வழக்கில் சோனி நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. சோனி நிறுவனத்தை வழக்கில் இணைக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

சாலைப்பணி: விரைந்து  முடிக்க உத்தரவு

சென்னை: தமிழ் நாட்டில் வடகிழக்கு பரு வமழை அக்டோபர் 2-ஆ வது வாரம் தொடங்கும் என வானிலை மையம் கணித்த நிலையில், பரு வமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக சாலைப் பணிகளை அக் டோபர் 15 ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.