tamilnadu

முன்கூட்டி விடுதலை; தண்டனைக் குறைப்பு விவகாரம் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா?

முன்கூட்டி விடுதலை; தண்டனைக் குறைப்பு விவகாரம் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா?

3 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரை சென்னை, செப். 7- தண்டனை குறைப்பு, முன்கூட்டியே விடுதலை வழங்குவது போன்ற விவகாரத்தில், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடு தலை செய்ய, மாநில அரசு பரிந்துரை செய்தும், அந்த  கோரிக்கைகளை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாரா யணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ‘இந்த விவகாரத்தில், சென்னை உயர்  நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளன’ என, வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, பி.புகழேந்தி, எம்.முகமது சைபுல்லா, எஸ்.மனோகரன் மற்றும் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆகியோர் நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டினர். முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்து, ஆளு நர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கொலை குற்ற வாளி வீரபாரதி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில், நீதி பதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு, கடந்தாண்டு அக்டோபர் 17-இல், “முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்த பின், கொடுங்குற்றத்தில் ஈடுபட்ட தாகக் கூறி, சம்பந்தப்பட்ட கைதியின் கோரிக்கையை  நிராகரிக்க முடியாது. இந்த விஷயத்தில் கவர்னர் சுயமாக செயல்பட முடியாது. அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது. மற்றொரு கொலை குற்றவாளி முருகன் என்பவர்  தொடர்ந்த வழக்கில், இந்த உத்தரவுக்கு மாறாக, உரிய பிரிவுகளில் வழக்கு தொடரப்படாததை சுட்டிக்காட்டி,  “அமைச்சரவை பரிந்துரைத்தும், முன்கூட்டியே விடு தலை செய்ய மறுத்த ஆளுநர்களின் உத்தரவு செல்லும்” என, கடந்தாண்டு நவம்பர் 6இல் நீதிபதிகள்  ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.பூர்ணிமா அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த இரு அமர்வுகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளதால், முன்கூட்டியே விடுதலை செய் வது, தண்டனை குறைப்பு வழங்குவது போன்ற விஷ யங்களில், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து, மூன்று நீதிபதி கள் அடங்கிய அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்து,  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதற்கு ஏதுவாக இந்த வழக்குகளையும், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவாவுக்கு அனுப்பி  வைக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, எந்தெந்த சூழ்நிலைகளில் அமைச்சரவை பரிந்துரைக்கு மாறாக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்பதையும், மூன்று நீதிபதிகள் அமர்வு முடிவு செய்ய  வேண்டும் என, தங்கள் உத்தரவில் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.