கவனமாக இருக்க மாணவர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை
போதைப் பொருட்கள் பாதிப்பு
தஞ்சாவூர், ஜுன் 30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திங்கட்கிழமை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்ட தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி.ராணி தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் நா. பழனிவேலு வரவேற்றார். மது விலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் எம்.ஏ.திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், “மாணவர்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக, கட்டுப்பாடு உடையவர்களாக, ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்தவர்களாக திகழ்ந்து கல்வியி லும், வாழ்விலும் உயர் நிலையை அடைய வேண்டும்’’ என்றார். “செல்போன் பயன்படுத்து வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என்றார். தொடர்ந்து,”சைபர் குற்றங்கள், போதைப் பொருட்கள் பயன்டுத்துதல், ஆண்- பெண் பாலியல் சீண்டல்கள், போக்சோ சட்டம் குறித்து விளக்கிப் பேசினார். மேலும், “போதைப் பொருட்கள் நமது வாழ்க்கையை சீரழித்து விடும். அது குறித்து எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடுகளிலேயே, பெற்றோர்கள் போதைப்பொருட்களை உப யோகித்தால், அதன் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். வீட்டிலிருந்தே போதைப் பொருளுக்கு எதிரான நமது பிரச்சாரத்தை நாம் முன்னெடுக்க வேண்டும்” என கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், துறை களை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினர். பேராசிரியர் ரா. அருண்மொழி நன்றி கூறி னார். பேராசிரியர் கு.முத்துக்கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். புதிதாக கல்லூரியில் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.