tamilnadu

img

பதற்றம் வேண்டாம்; குடும்பத்துடன் வீட்டில் இருங்கள் மதுரை மக்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., வேண்டுகோள்

மதுரை,மார்ச் 24-  மதுரை மாவட்ட மக்களுக்கு சு. வெங்கடேசன் எம்.பி.,வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:  மதுரையில் முதல் கொரோனா  தொற்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டு ள்ளது. “சமூக பரவல் இன்னும் இல்லை” என அரசு அதிகார இய ந்திரங்கள் இன்னமும் சொல்லிக் கொ ண்டிருக்க, அறிவியலாளர்கள் ஆய்வு வட்டம் நாம் சமூக பரவல் நிலைக்கு வந்துவிட்டோம் என வலு வாய்ச் சொல்கிறார்கள். 

நாம் செய்ய வேண்டியது என்ன? 
இந்தியாவில் 40-50 சதவீத மக்கள் இத்தொற்றுக்குள் செல்வர் என்பது உலக அறிஞர்கள் பலரின் கருத்து.  அந்த அத்தனை பேரும் நோயாளி கள் ஆகப்போவது இல்லை. மிகச்  சொற்பமான சதவீதம்தான் நோய்வா ய்ப்பட போகிறது. அந்த சொற்பத்து க்குள் சிக்காமலிருக்க இப்போதை க்கான முதல் தீர்வு வெளியில் உலவு வதை நிறுத்துவது.  உலகெங்கும் வரும் ஆய்வு முடி வுகள் எல்லாம் இந்த இக்கட்டான சூழலிலும் நம்பிக்கை அளிப்பவையா கவே உள்ளன. நோபல் விஞ்ஞா னியும் இங்கிலாந்தின் நோய்த் தடுப்பு  பேராசிரியர் மைக்கேல் லெவிட்ட் “  இலகுவாய் இதனை கடந்து போ வோம்; இப்போதே வைரசின் உக்கிர வீரியம் குறையத் துவங்கியுள்ளதன் தெள்ளத் தெளிவான அடையா ளங்கள் தெரிகின்றன” என்கிறார். அவர்தான் “சீனத்து வுகானின் 82000 பேர் தொற்று பெறுவர் ; 3250 பேர் உயிரிழப்பர்”, என மிக தெளிவாக மருத்துவ அல்காரிதத்தில் அள விட்டுச் சொன்னவர். 100 சதவீதம் அவரது அனுமானம் உண்மை யானது. அவர் நம் ஊர் ஜோசியர் அல்லர். மருத்துவ புள்ளியியல் பர வுநிலை ஆய்வாளர். அவர் சொ ல்வது சீக்கிரம் “இதனை கடந்து சென்றுவிடுவோம்; அதற்கு ஒரே  இப்போதய தேவை சமூக இடை வெளி மட்டுமே.,”என்பதுதான்  நமது வேலூர் கிறித்துவக் கல்லூ ரியின் பேராசிரியரும் நோய்பரவுதல் குறித்த அறிஞருமான டாக்டர் ஜெய ப்பிரகாஷ் முல்லையில் “உண்மை யை மறைப்பதில் பிரயோஜன மில்லை; உண்மை விவரங்கள் ஒன்றே மக்களை இந்நோயில் இருந்து காத்துக்கொள்ள தயாராக்கும்” என சொல்லியுள்ளார். கூடவே இப்பவும் நாம் “அன்னியப்பட்டு ஒதுங்கி இருந்து சமூக இடைவெளியை அதிகமாக்குதல்” ஒன்றே நம் குடு ம்பத்தை,நம் ஊரை தேசத்தை, பாது காக்கும் என்கிறார்.

மதுரை மக்களுக்கு வேண்டுகோள் 
1. பீதியோ பதற்றமோ ஓலமோ வேண்டாம். அறியாமை தான் பதறும்.விழிப்புணர்வு அமைதியாய் ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடும்.
2. எக்காரணம் கொண்டும் கூட்டம் வேண்டாம். குடும்பத்தோடு    வீட்டில் இருங்கள்.
3. உணவு காய்கறிகள் கண்டிப்பாய் எல்லா நாளும் கிடைக்கும். பதற்றத்தோடு இன்றே வாங்க முந்தி கூட்டம் சேர்க்க வேண்டாம். பதற்றத்தில் நாம் சேர்க்கும் கூட்டம் பல நூறு புதிய கொரோனா தாக்கு
தலுக்கு இடமளிக்கும்.
4. எந்த சுய வைத்தியத்தையும் தற்காப்பு என பதற்றத்தில் சாப்பிட வேண்டாம். இணையத்தில் வரும் பலசந்தர்ப்பவாத கூச்சல்களை மருந்தென நம்பி சிக்கிக் கொள்ள வேண்டாம். 
5. உங்கள் சர்க்கரை அளவு, இரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கிறதா? என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பாதிப்படைவோரில் கணிசமானவர் இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்காத வயோ
திகர் மட்டுமே. 

அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இதுவரை எப்படி அது செயல்பட்டதோ அதில் இருந்து சட்டென மாறி ஒரே நாளில் பாய்ச்சல் வேக த்தை எட்டிவிடாது. எனவே அதீத நம்பி க்கைகொண்டு ஏமாற்ற மடைய வேண்டாம். அதே நேரம் இந்தியா வின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது நமது பொது சுகாதார கட்ட மைப்பு மேம்பட்டது. இந்த இரண்டு உண்மையையும் நாம் புரிந்து கொள்வது முக்கியம்.  மதுரை மாவட்டத்தில் வருட த்துக்கு ஆறு மாதத்துக்கும் குறை வான வேலைவாய்ப்பு உள்ள விளிம்பு நிலைப்பணியாளர்கள் 1 லட்சத்து  80 ஆயிரத்து 730 பேர், விவசா யக்கூலித்தொழிலாளர்கள் 2 லட்சத்து  87 ஆயிரத்து 731 பேர், சிறுகடை களில் வேலைசெய்வோர் 39 ஆயி ரத்து 753 பேர். இதுதவிர வீடற்ற வர்கள், குடும்பமற்றவர்கள். அனை த்து வகையான விளிம்புநிலை மக்கள்  என சுமார் ஏழு லட்சம் மக்கள் உள்ள னர். இவர்கள் அனைவரின் வாழ்வி யல் உத்தரவாதம் அரசின் நிவாரண நடவடிக்கையை முழுமையாக சா ர்ந்துள்ளது.

தனித்திருப்போம், விழித்திருப்போம்
அரசு நிர்வாகம் கொரோனா வை ரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சை வழங்கு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் வேலை யிழந்த, பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கான நிவாரண நட வடிக்கையில் முழுக் கவனம் செலுத்த வைக்க நாடாளுமன்ற உறு ப்பினர் என்ற முறையில் எனது பங்கு முழுமையாக இருக்கும். அதே நேரம் இது சமூகப்பிரச்சனையாக மாறி நிற்கும் ஒவ்வொரு தனிநபரின் உடல்நலம் சார்ந்த பிரச்சனை. எனவே நமக்கான நமது கவனம் மிகமிக முக்கியம்.  மதுரை நெரிசலுக்குப் பெயர் போனது. நம் நெரிசல் நம் பண்பாடு; நம் வாழ்வியல் கூறு. ஆனால் அந்த வாழ்வியல் பழக்கத்தை மாற்றி நிற்க வேண்டிய கட்டாயத்தில் இரு க்கின்றோம். “மாமா மச்சான்” என அந்நியோன்யமாயிருந்த கூட்டம் விலகி அன்னியப்பட்டு இருக்க வேண்டியுள்ளது இந்த காலத்தின் கட்டாயம். இத்தாலியின் மிலன் நக ரமும் வெனிசும் நம் மதுரையின் வீதி கள் போன்றதுதான். அதன் பண்பாட்டு வெளி நம் மதுரைக்கு அணுக்கமானதுதான். ஆனால் இப்போது அங்கெல்லாம் கேட்கும் மரண ஓலத்துக்கும் வழியில்லாமல் வயோதிகத்தை “செல்லட்டும்” என விட்டுச்சென்ற கண்ணீர் காலம் வந்தமைக்கு ஒரே காரணம் நெருங்கி இருந்ததும் முன்னெச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதும்தான்.  உலகின் பிறநாடுகளிலும், நகர ங்களிலும் இருந்து பாடம் கற்போம்.  தனித்திருப்போம், விழித்திரு ப்போம், வரும் நாட்களில் இழப்பின்றி  நகர தெளிவு கொண்டிருப்போம்.

;