tamilnadu

img

100 மையங்களில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

ஒன்றிய மோடி அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் மதுரை அரசரடி ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே நிலங்களை தனியாருக்கு விற்பதைக் கைவிடக் கோரி அரசரடி ரயில்வே மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு சார்பில் மதுரையில் 100 மையங்களில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நவம்பர் 29 புதனன்று நடைபெற்றது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், துணை மேயர் தி. நாக ராஜன், ஆதித்தமிழர் கட்சி நிறுவன தலைவர் கு. ஜக்கை யன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகி யோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெ. லெனின்,  வை.ஸ்டாலின், டி. செல்வா மற்றும் ரயில்வே நில பாது காப்புக்குழு செயலாளர் பி. பால்ச்சாமி, பொருளாளர் ஆர்.  சுடலைமுத்து, அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர்  சங்கம் (சிஐடியு) தலைவர் பி.எம்.அழகர்சாமி, பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர், மாநில சம்மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை, சிஐடியு மாவட்ட பொருளாளர் ஜே.  லூர்துரூபி, நிர்வாகி ஜி. ராஜேந்திரன், திமுக மாமன்ற  உறுப்பினர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மத்திய - 2ஆம் பகுதி குழு சார்பில் காஜிமார் தெரு  உள்ளிட்டு பத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், பகுதிக்குழு செய லாளர் பி. ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. கோபி நாத், யூ. எஸ். அபுதாகிர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இந்திரா காந்தி, ராஜேந்திரன், குரு விஜயா, பானு முபாரக்  மந்திரி, பாஸ்கரன் அபிராமம் பேரூராட்சி மன்ற உறுப்பி னர் ரவிக்குமார், தமிழ் தேசிய பேரியக்க செயலாளர் கே.  கணேசன், மணியம்மை மழலையர் பள்ளி தாளாளர் பி.  வரதராசன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். மத்திய - 1ஆம் பகுதிக்குழு சார்பில் கார்க்கி படிப்பகம்  உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மையங்களில் கையெழுத்து  இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள், அழகு சுந்தரம், சிபிஎம்  மாவட்டக்குழு உறுப்பினர் ஏ. பாண்டி, திமுக வட்டச் செய லாளர் தவமணி, சுரேஷ், சீனி ரமேஷ், பொதுக்குழு உறுப்பி னர் பரமன், பகுதி செயலாளர் எஸ். எஸ். மாறன், மதிமுக  மாநில ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர் எஸ். மகபூப்  ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கு - 1ஆம் பகுதிக்குழு சார்பில் பெத்தானியா புரம், கோச்சடை, சம்மட்டிபுரம் உள்பட பத்துக்கும் மேற்  பட்ட மையங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.மல்லிகா,  தமுஎகச மாவட்டச் செயலாளர் கா. இளங்கோவன், திமுக  மாமன்ற உறுப்பினர் சி.நாகநாதன், வட்டச் செயலாளர்கள்  ஜீன்ஸ் சிவா, நாகஜோதி சிவா, ராஜேஷ், பாலாஜி, பால முருகன், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  மேற்கு - 2ஆம் பகுதிக்குழு சார்பில் ஜெய்ஹிந்த்புரம், சோலை அழகுபுரம் உள்பட ஏழு இடங்களில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பி னர் -துணை மேயர் தி. நாகராஜன், பகுதிக்குழு செயலாளர்  ஏ.எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு - 1ஆம் பகுதிக்குழு சார்பில் களத்து பொட்டல்  பகுதியில் திமுக மாமன்ற உறுப்பினர் பி. கஜேந்திரகுமார்  துவக்கிவைத்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அ. ரமேஷ், டி.செல்வா, பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர். அண்ணா நகரில் மதுரை மாநகர முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு துவக்கி வைத்தார். மாமன்ற உறுப்பி னர் விஜயலட்சுமி, வட்டச் செயலாளர்கள் செல்வராஜ், சுரேஷ், பகுதிச்செயலாளர் சித்திக், முன்னாள் துணை  மேயர் பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு - 2ஆம் பகுதிக்குழு சார்பில் புதூர் பேருந்து நிலையம், மீனாபாள்புரம் உள்பட பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது புதூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் -மாமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர் . சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், வை.  ஸ்டாலின், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி. ராதா, என். ஜெயச்சந்திரன், கே.  அலாவுதீன், எஸ். வேல்தேவா, மாமன்ற உறுப்பினர் டி.  குமரவேல், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்,  மாயத்தேவன், திமுக மாமன்ற உறுப்பினர் முரளி, வட்டச்  செயலாளர்கள் நல்ல காமன், ராயன், ஆழ்வார், மருது,  கருப்பு ராஜா, மணிகண்டன், வடக்கு மண்டல தலைவர் சர வண புவனேஸ்வரி, சிபிஐ நந்தா சிங், பார்வர்ட் பிளாக்  வி.எஸ்.நவமணி, தமிழ் தேசிய இயக்க மெய்யப்பன் மற்றும் அபூபக்கர், சங்கர பாண்டியன், மதிமுக வழக்கறி ஞர் நாகராஜன், பொன் பாலு, விசிக சார்பில் இனிய அரசன்  உள்பட கலர் கலந்து கொண்டனர். தெற்கு பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற கையெழுத்து  இயக்கத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ம. பாலசுப்பிரமணியம், ஆர். சசிகலா பகுதிக்குழு  செயலாளர் ஜெ. லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்  கண்ணன், திமுக நிர்வாகிகள் கண்ணன், ஆறுமுகம்,  பிஸ்மி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தாமரைக்கண்ணன், சையது அபுதாகிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஆட்டோ-கட்டுமானத் தொழிலாளர்கள்

சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் நடை பெற்ற இயக்கத்தில் மாவட்ட தலைவர் இரா. தெய்வ ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் கனகவேல், பொருளா ளர் அறிவழகன், சாலை போக்குவரத்து சங்க தலைவர்  இ.உதயநாதன், பொதுச் செயலாளர் செந்தாமரைக்  கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். கட்டுமானத்தொழிலாளர் சங்கம் சார்பில் அவனியா புரம் பகுதியில் கையெழுத்து இயக்கத்தில் மாநிலப்பொரு ளாளர் ஜெ.லூர்துரூபி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  மாவட்ட தலைவர் பி. வீரமணி, செயலாளர் அ. பாலமுரு கன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் கே. அலாவுதீன், என். கணேசன் மூர்த்தி, என். ஜான்சன் ஆகியோர் மதுரையில் உள்ள தேவாலயம் மற்றும் பள்ளிவாசல்களில் கையெ ழுத்துக்களை பெற்றனர். காப்பீட்டுக்கழக ஊழியர்கள் மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். மதுரை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில்  பொதுச்செயலாளர் என். பி. ரமேஷ் கண்ணன், தலை வர் நா. சுரேஷ்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கையெ ழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் தெற்கு பகுதிக்குழு சார்பில் நெல்பேட்டை பகுதி யில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தடகள சங்க தலைவர் ஆதரவு

மதுரை மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜி. கோபாலகிருஷ்ணன், செயலாளர் உஸ்மான் அலி, துணைத் தலைவர்  திரைப்பட நடிகர் பரணி, துணைச் செயலாளர் சேந்தன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆதரவை தெரி வித்தனர். குறிஞ்சி அரிமா சங்கம்- மனோ கரா பள்ளி இணைந்து சுமார் 5000 கையெழுத்துக்களை மக்களிடம் பெற்றனர். இதனை மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேச னிடம் மனோகரா பள்ளி தாளாளர் பால் ஜெயக்குமார் வழங்கினார். 65 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நாதநாதன் கூறுகை யில், மறைந்த எனது தந்தையார்- முன்னாள் துணை மேயர் சின்னச் சாமி அகில இந்திய தடகளம் மற்  றும் கைப்பந்து விளையாட்டு வீரர்  களை உருவாக்கியவர். இந்த மைதா னத்தில் தடகளம் மற்றும் கைப்பந்து பயிற்சிகளை மேற்கொண்ட காலங்களை நினைவு கூர்ந்தேன். நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் முயற்சிக்கு துணை  நிற்போம். ரயில்வே மைதானத்தை பாதுகாப்போம் என்று தெரிவித்தார்.

மைதானத்தை பாதுகாக்க சிபிஎம்முடன் துணைநிற்போம்

மதுரை பெரியார் பேருந்து நிலை யத்திற்கு வந்த பயணிகள் சிலர் கூறு கையில், மதுரை மாநகர் பகுதியில்  இரண்டு விளையாட்டு மைதா னங்கள்தான் உள்ளன. அதில் ஒன்று  ரயில்வே மைதானம். இங்கு காலை நேரத்தில் மக்கள் நடைபயிற்சி  மேற்கொள்ளவும் உடற்பயிற்சி கூடத்திற்கும் பல விளையாட்டு வீரர்  கள் வருகின்றனர். இதற்கு மாதக் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லை. இருந்தாலும் அதிகப்படி யான மக்கள் பயன்பெறும் வகை யில் இந்த ரயில்வே மைதானம் உள்  ளது. இதை தனியாருக்கு கொடுத்து  விட்டால் இங்கு பயிற்சி பெற வரும்  மக்கள் எங்கே செல்வார்கள்? மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற அமைப்புகள் தான் இது போன்ற இடங்களை பாதுகாப்பதற்கான முன்னெடுப்புகளை செய்கிறது. எனவே இவர்களோடு சேர்ந்து ரயில்வே மைதானத்தை பாதுகாக்க ஆதரவை தெரிவிக்கின்றோம் என்று கூறினர்.