tamilnadu

img

சுற்றுலா வாகன விதிகள் மீறல்..? போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

சென்னை,ஜூன் 11- அகில இந்திய சுற்றுலா பேருந்து களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் இதுதொடர்பாக கூறப் பட்டிருப்பதாவது: “அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் பயணிகள் பேருந்துகள் போல  இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்ற வாக னங்கள் வேறு வகையில் செயல்படுகின் றன. எஸ்எம்எஸ், இ-டிக்கெட் மற்றும் ரெட் பஸ், அபி பஸ் போன்ற செயலி மூலம் மின்னணு டிக்கெட் தந்து  தனி நபர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துள்ளனர். ஒப்பந்தத்தின்  படி, பேருந்து நிறுவனங்கள் அவர்களின் திட்டமிட்ட பாதை, தேதியை பின்பற்றா மல் இருந்துள்ளனர்.   எனவே அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் நெறி முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண் டும். அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்ற பேருந்து  உள்ளிட்ட வாக னங்கள் விதிமீறலில் ஈடுபட்டால் நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.