மதுரை, ஜூன் 29- சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெய ராஜ், பென்னிக்ஸ் காவல்துறையால் கொல் லப்பட்டதைக் கண்டித்தும் தொடர்புடைய காவலர்களை கைதுசெய்யவேண்டுமென வலியுறுத்தி மதுரை யா.ஒத்தக்கடை, திண்டுக் கல்லில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் பா.காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிழக்கு தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிர்வாகி பிலால், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க நிர்வாகி அதிகாரி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி விஜய குமார், காங்கிரஸ் நிர்வாகி செளந்தரபாண்டி யன், மக்கள் அதிகாரம் சரவணன், தனித் தமி ழர் கட்சி நிர்வாகி எழிலரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல்
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் திண்டுக்கல் பொன்னகரம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடிய னூத்து ஊராட்சித் தலைவர் ஜீவானந்தம், ஒன்றியச் செயலாளர் அஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.