tamilnadu

img

வீட்டில் இருந்தபடி ஆவின் பால் வாங்க ஏற்பாடு!

சென்னை, ஏப். 6- வீட்டில் இருந்தபடியே ஆவின் பால் வாங்க ஏற்பாடு  செய்யப்படும்  என்று பால் வளத்துறை  அமைச்சர் நாசர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை தமது துறை மீதான விவாதத்திற்கு பதில்  அளித்து பேசிய அவர், “நுகர் வோருக்குத் தேவையான ஆவின் பால் மற்றும் பால்  பொருட்களை வீட்டிலிருந்த படியே வாங்க வசதியாக, இணையவழி விற்பனை ஏற்படுத்தப்படும். இதற்காக தனி செயலி, இணையதளம் உருவாக்கப்படும். முதல் கட்டமாக சென்னை மற்றும் இதர மாநகரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படு” என்றார். புதிதாக காஞ்சிபுரம், திருவாரூரை தலைமை யிடமாகக் கொண்டு புதிதாக  2 மாவட்ட கூட்டுறவு பால்  உற்பத்தியாளர் ஒன்றி யங்கள் உருவாக்கப்படும். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு இணை யம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களி லுள்ள நேரடி நியமனத் திற்கான காலிப் பணியிடங் கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் எனவும்  அவர் கூறினார்.

தொடர்ந்து புதிய அறி விப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர் களின் நலனை பாதுகாக்க “பணியாளர் கள் நல நிதி” உருவாக்கப் படும். பால் உற்பத்தியாளர் கள் வங்கிக் கடன் மூலம் புதியதாக 2 லட்சம் கறவை மாடுகள் வாங்கும் ‘ஆவின் பால் பெருக்கு’ திட்டம் செயல்படுத்தப்படும். ஓய்வூதியர்கள் மரண மடைந்தால் அந்த குடும்பத் திற்கு நிதி உதவி அளிக்க “ஆவின் ஓய்வூதிய குடும்ப  பாதுகாப்பு நிதி” உருவாக் கப்படும். அம்பத்தூர் பால்  பண்ணையில் ரூ.1.5 கோடி யில் சாக்லேட் உற்பத்தி  பிரிவு ஒன்று தொடங்கப் படும். 

மாதவரத்தில் அருங்காட்சியகம்

ரூ. 4 கோடியில் கள்ளக் குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பால் பாக்கெட் உற்பத்தி ஆலை கள் நிறுவப்படும். தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு புதியதாக  கட்டடங்கள் கட்டித்தரப் படும். சென்னை மாதவரம் பால் பண்ணை பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.