tamilnadu

img

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்கிடுக! - தி. தமிழரசு ,தலைவர்

கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் 8ஆவது மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் 8, 9  தேதிகளில் காஞ்சி மாநகரில் வங்கி வளர்ச்சி, மாநில உரிமைகாத்தல் இவற்றோடு ஊழியர் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்றது. கூட்டுறவு அமைப்புகள் முதலாளித் துவத்துக்கும் சோசலிசத்துக்கும் இடைப்பட்டு மக்கள் நலன் காக்கும் பொரு ளாதார அமைப்பாகும். உலகம் முழு வதும் துவக்கப்பட்ட புதிய பொருளா தார கொள்கை வலது சாரி கருத்துக் களுக்கு வலுசேர்த்து பெரும் பணக்காரர் கள் உருவாகிடவும், ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறும் நிலைக்கும் தள்ளி யது. இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற இப்பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக பல வளரும் நாடுகளில் கூட்டுறவு அமைப்புகளை மக்கள் துயர் துடைக்க பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளிலும் கூட்டு றவு இயக்கம் மக்கள் சார்ந்த இயக்கமாக பிரான்ஸ், பெல்ஜியம், பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட முன்னேறிய நாடுகளி லும் கூட்டுறவு என்பது பாதுகாக்கப்பட்டு இயங்கி வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் கூட கூட்டுறவு மிகச்சிறப்பான முறையில் செயல்படுகிறது.

நவீன பொருளாதார கொள்கையும், கூட்டுறவுகளும்

நமது நாட்டிலும் 1990-களின் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகள் எங்கும் எதிலும் தனியார்மயம் என்பதை நோக்கி  நகர ஆரம்பித்துள்ளது. நமது வங்கித் துறையில் நரசிம்மம் கமிட்டி I, II மற்றும் அடுத்தடுத்து வந்த பல்வேறு கமிட்டிகள் பரிந்துரையின்படி பொதுத்துறை வங்கி களை தனியாருக்கு தாரைவார்க்கும் செயல்பாடுகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகின்றது. 27 பொதுத்துறை வங்கிகள் தனியார் துறையில் இருந்ததால் பெரும் சரிவுக்கு உள்ளாகி பெரும் நஷ்டத்தை அடைந்தன. நமது நாட்டில் இந்த தாக்கம் பெரிதாக உணரப்படவில்லை. காரணம்  பொதுத்துறையில் வங்கிகள் இருந்ததால் தான். ஆனால் தற்போது இந்த அபாயத்தை உணராமல் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு ஆதரவாக பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்கள் சுமார் 10.5  லட்சம் கோடி தள்ளுபடி செய்து இவ்வங்கி களின் செயல்பாடுகளை முடக்கி வருகிறது ஒன்றிய அரசு. கூட்டுறவுகளில் சீர்திருத்தம் என்ற  பெயரில் முதலில் 2011இல் அரசிய லமைப்புச் சட்டத்தின் 97ஆவது சட்டதிருத்த  மசோதா ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதில் பல ஷரத்துக்கள் மாநில உரிமை களில் தலையீடு செய்வதாக உள்ளது. வங்கிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 1949-க்கு திருத்தம் செய்து கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை முழுவதுமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் வகையில் சட்டத்திருத்தம் 2020 நிறை வேற்றப்பட்டுவிட்டது. மேலும் ஒன்றிய அரசு கூட்டுறவுகளுக் கென்று தனி அமைச்சகம் உருவாக்கி யுள்ளது. கூட்டுறவுகளை முழுமையாக ஒன்றிய அரசு தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பு ஏற்றிருப்பது இதையே உறுதி செய்கிறது.

கூட்டுறவு வங்கி வளர்ச்சி சார்ந்த கோரிக்கைகள் (அ) தமிழ்நாடு வங்கி

நாடு முழுவதும் குறுகிய கால கடன்  வழங்கும் நிறுவனங்கள் மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிகள் (32) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (360) பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்கள் (95000) இவற்றின் செயல்பாடுகள் மேம்பாட்டால் கிராமப்புற அரசியலில் ஒரு பிடிமானத்தை உரு வாக்கிட முடியும் என்று ஒன்றிய அரசு கருது கின்றது. இதற்காக அமைச்சகம் உரு வாக்கி திட்டங்களை தீட்டிவருகிறது. சமீபத்தில் கேரளம், சத்தீஸ்கர், பஞ்சாப்  உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில, மத்திய வங்கிகளை இணைத்து புதிய வங்கி  உருவாக்குகின்றனர். கேரளாவில் 3ஆவது  பெரிய வங்கியாக கேரள கூட்டுறவு வங்கி  நல்ல முன்னேற்றம் கண்டு திகழ்கிறது. தமி ழகத்திலும் இரண்டடுக்கு முறையை உரு வாக்கி தமிழ்நாடு வங்கியை உருவாக்கிட வேண்டும் என்ற கோஷத்தோடு தான் இம்மாநாடு நடைபெறுகின்றது.

1. இரண்டடுக்கு முறை மூலம் விவசாயி களுக்கு கொடுக்கக்கூடிய கடனின் வட்டி வீதம் 1.5% லிருந்து 2.5% வரை குறையும்.

2. மாவட்டங்கள் தோறும் வங்கிகளுக்கு ஆகும் நிர்வாகச் செலவுகள் கணிசமாக குறையும். 3. தலைமை வங்கியின் கிளைகள் என்ற முறையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கடன் கொள்கையை பின்பற்ற முடியும். பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைக்கும். இதை மாநில  அரசு கொள்கை உறுதியுடன் செயல்படுத்திட வேண்டும்.

(ஆ) நகரக்கூட்டுறவு வங்கி

நகரக்கூட்டுறவு வங்கிகள் 120 மற்றும் 7 பணியாளர் கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றில் சுமார் 15 முதல் 20 வங்கிகள் பலவீனமாகவும், நட்டமடையும் வங்கிகளாகவும் உள்ளன. இவை பலம் பெற இவ்வங்கிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து ஒரே வங்கியாக மாற்ற வேண்டும். தற்போது பாரத ரிசர்வ் வங்கி நகர வங்கிகளில் நடைபெறும் சிறு தவறுகளுக்கு பல லட்சங்கள் அபராதம் போடும் நிலை உள்ளது. இவ்வங்கிகளிலும் தரம், வலு உயர்வது டன் தேவையற்ற நிர்வாகச் செலவுகள் தவிர்க்கப்படும். இதையும் மாநில அரசு செய்யும் என்று எதிர்பார்க்கின்றோம்.

கூட்டுறவு வங்கிப் பணியாளர் கோரிக்கைகள்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி  ஊழியர்கள் ஊதிய உயர்வு 31.12.2020- வுடன் முடிவடைந்தது. பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டு முதல் கூட்டம்  நடந்துள்ளது. இது துரிதப்படுத்தப்பட வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கி ஊழி யர்களின் கடந்த ஒப்பந்தம் 31.12.2021-வுடன் முடிவடைந்தது. பேச்சு வார்த்தைக்குழு அமைத்து இப்பகுதி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை பேசி தீர்க்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு பென்சன் திட்டம் என்பது பெரிய கன வாகவே உள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் கருணைத் தொகை  அறிமுகப்படுத்தி 12 ஆண்டுகள் ஆகின்றன. பென்சன் நிதியம் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் உள்ளது. இதை வைத்து உடனடி யாக பென்சன் திட்டம் உருவாக்கி முழுமை யான பென்சன் வழங்கப்படவேண்டும். இதேபோல் நகரக் கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் கருணை ஓய்வூதியம் மற்றும் பென்சன் நிதியம் உருவாக்கிட ஆணை பிறப்பிக்கப்படவேண்டும்.

* மத்திய, நகர கூட்டுறவு வங்கிகளில் கடந்த 12(3) ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்ட கல்விச்சலுகை, மருத்துவச்சலுகை உள்ளிட்ட சில ஷரத்துக்கள் நடை முறைப்படுத்தாமல் உள்ளது.

*    2015-2016-முதல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கான முதுநிலைப் பட்டியல் வெளியிடாமல் உள்ளது.

* உதவி மேலாளர் பதவி உயர்வில் 3:1 நீக்கப்படவேண்டும். * நகர வங்கிகளில் CBS மேம்பாடு மற்றும் கட்டணம் குறைப்பு. * களப்பணியாளர்களாக எழுத்தர்களை நியமிக்கக்கூடாது.

*தொடக்க சங்கங்களில் நடை பெறும் முறைகேடுகளுக்கு மத்திய வங்கி பணியாளர்களை பொறுப்பாக்கக்கூடாது.

*பெண் ஊழியர்களுக்கென தனி கழிப்பறைகள்.

*அரசாணைப்படி கடைநிலை ஊழியர், ஓட்டுநர் காவலர் நிரந்தர பணியாளர் களாக நியமித்தல்.

* நகை மதிப்பீட்டாளர்கள் நிரந்தர ஊழி யர்களாக நியமித்தல். * ஒரே பதவியில் பதவி உயர்வு இன்றி 7  ஆண்டுகள் பணிபுரிந்தால் கூடுதல் இன்கிரிமென்ட் வழங்குதல்.

* மாவட்ட மாறுதல் வழங்கல்.

* நகர வங்கிக்கும் பணிநிலைத்திறன் குழு  அமைத்து மாற்றிட வேண்டும்.

* நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு வழங்கல் மற்றும் பணிக்கொடையில் சில வங்கி களில் உச்சவரம்பு உள்ளதை நீக்கிட வேண் டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை உள்ளடக்கி இம்மாநாடு நடைபெறுகிறது. 

கூட்டுறவு அமைப்புகளை பாதுகாப்பது நமது விவசாயிகளையும் நடுத்தர மக்க ளையும் பாதுகாப்பதாகும். நமது மாநில பொருளாதாரம் உயர கூட்டுறவு வங்கி களின் செழிப்பான வளர்ச்சி அவசியம். இவ்வளர்ச்சியை உத்தரவாதப்படுத்திட இம்மாநாட்டில் திட்டங்கள் தீட்டுவோம்.
 


 

 

;