tamilnadu

img

அடிப்படை வசதிகளற்ற கோபாலபட்டினம் சிபிஎம் காத்திருப்பு போராட்டம் துவங்கியது

அறந்தாங்கி, அக்.26 -  கோபாலபட்டினத்தில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஆவுடையார்கோவில்  ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றி யம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சி, கோபாலபட்டினத்தில் ஆங்காங்கே மலை போல் குவிந்துகிடக்கும் குப்பை களால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படு வதை தடுக்க வேண்டும். உடனடியாக குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். கோபால பட்டினத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து அனைவருக்கும் குடிநீர் வசதியை உறுதிப்படுத்த அரசு மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோபாலப்பட்டினம் மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடந்த ஓராண்டாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்து, தர்ணா, சாலை மறியல் என பல போராட்டங்கள் நடத்தினர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.  இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத தைக் கண்டித்தும் உடனடியாக அடிப் படை வசதிகளை செய்துதரக் கோரியும் வியாழக்கிழமையன்று ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் காத்திருக்கும் போராட்டம் துவங்கியது.   இப்போராட்டத்திற்கு கட்சியின் மீமிசல் கிளைச் செயலாளர்.ஏ.அமீர் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்  ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர்,  மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுப்பிர மணியன், ஒன்றியச் செயலாளர் நெருப்பு முருகேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம். எஸ். கலந்தர், எஸ்.அழகர், ஜி.முருகேசன், கூத்த பெருமாள், கோபாவ பட்டினம் ஜமாத்  தலைவர்கள். ஏ.எஸ்.எம்.சையது அலி, ஓ.எஸ்.எம்.ஜின்னா மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.  கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.