tamilnadu

img

திருச்சி புறநகரில் 227 மையங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் :10ஆயிரம் பேர் திரண்டனர்

திருச்சிராப்பள்ளி, அக்.6- சுத்தமான, சுகாதாரமான குடிநீர் தங்கு தடையின்றி தினந்தோறும் வழங்க வேண்டும்; பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்; ஏரி, குளங்களை தூர்வாரி மரா மத்து செய்ய வேண்டும்; ரேசன் கடைகளில் அனைத்து பொருட் களையும் விநியோகம் செய்ய வேண்டும்; தண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டும்; 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் முழுமையாக 100 நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில் அக்டோபர் 6 அன்று ஒரேநாளில் 227 இடங்களில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோரிக்கைகளை விளக்கி திருச்சி சமயபுரம் வெங்கங்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மணப்பாறை, ஊனையூரில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திரு வெறும்பூர் மற்றும் தா.பேட்டையில் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லால்குடியில் சிவராஜ், மண்ணச்ச நல்லூரில் சந்திரன், மருங்கா புரியில் சிதம்பரம், தொட்டியத்தில் ராமநாதன், புள்ளம்பாடியில் நட ராஜன், துறையூரில் சுப்பிரமணி யன், திருவெறும்பூரில் மல்லிகா, முசிறியில் டி.பி.நல்லுசாமி, ஏ.பழநி சாமி, வையம்பட்டியில் பன்னீர் செல்வம் ஆகியோர் பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றி யச் செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், திருச்சி மாநகர், அரி யலூர், பெரம்பலூர், கரூர், புதுக் கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர். 

காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் செங்கொடிகளுடன் கலந்து கொண்டனர். சில இடங் களில் மனு கொடுத்தனர். பல  இடங்களில் அதிகாரிகள் நேரடி யாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி னர். அந்த இடத்திலேயே சில கோரி க்கைகள் அதிகாரிகளால் நிறை வேற்றப்பட்டன. மண்ணச்சநல்லூர் தில்லாம்பட்டியில் காலை 8 மணிக்கு  வராமல் இருந்த அரசுப் பேருந்து போராட்டத்திற்கு முதல் நாளே இயக்கப்பட்டது. கூத்தூர் ஊராட்சி யில் குடிநீர் குழாய் உடனே அமைக்க ப்பட்டது.  சில இடங்களில் காவல்துறை யினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி அனுமதி மறுத்தனர். இருந்தபோதிலும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கான ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடை பெற்றது. கடந்த 15 நாட்களாக வீடு, வீடாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், உறுப்பினர்கள் மக்களை சந்தித்து நோட்டீஸ் கொடுத்து போராட்டத் திற்கான தயாரிப்புப் பணிகளை செய்தனர்.  இந்த மாபெரும் இயக்கத் தில், திருச்சி புறநகர் மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் 400க்கும் மேற்பட்ட கிளைகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கைக்குச் செல்ல உத்தேசித்துள்ளன. 

 

;