tamilnadu

img

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு 571 ஆக உயர்வு.... தனிமையில் 90,824 பேர்

மதுரை:
தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. சனிக்கிழமை 485 ஆக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிறன்று மாலை 571-ஆக அதிகரித்துள்ளது. அதாவது 86 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை செயலாளர் பீலாராஜேஷ் கூறினார்.

ஞாயிறன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-
தமிழகத்தில் 485-ஆக கொரோனா தொற்று பாதிப்பு 571-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிறு மட்டும் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 85 பேர் தில்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் துபாயிலிருந்து திரும்பியவர் ஆவார்.

90,824 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 127 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். எட்டுப்பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா தொற்று இல்லை (Negative) என முடிவுகள் வெளியானாலும் சம்பந்தப்பட்டவர்கள் 28 நாட்கள் கண்டிப்பாக தனிமையில் இருந்தே ஆக வேண்டும். இன்று தொற்று இல்லை என்று ஒருவருக்கு முடிவுகள் வரலாம். சில நாட்கள் கழித்து சோதனை செய்யப்பட்டால் அவருக்கு தொற்று இருக்கிறது (Positive) என முடிவுகள் வரலாம். தனிமையில் இருப்பவர்கள் தங்களுக்கான காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்றார்.

தமிழகத்தை விட மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் தான் ஆய்வு மையங்கள் அதிகம் உள்ளன. ஆய்வு மையங்களுக்குத் தேவையான இயந்திரங்கள் வருகிறது... வந்து கொண்டிருக்கிறது. லேப் டெக்சீனியன்களுக்கு உரிய பயிற்சியளிக்கப்பட்டுவருகிறது. தமிழகம் இரண்டாம் நிலையில் தான் உள்ளது. மூன்றாம் நிலைக்குச் செல்லவில்லை என்றார்.
ஒவ்வொரு நாளும் செய்தியாளர்களைச் சந்திக்கும் பியூலா ராஜேஷ் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கையை மட்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். மற்றவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்றவர்கள் அல்லாமல் தனிமையில் உள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை போகிறபோக்கில் கூறி நழுவிக்கொள்கிறார்.

மூன்றாம் நிலைக்கு சென்றுவிட்டோமோ என்ற கேள்விக்கு நேரடியாக, தெளிவாக ஆம். இல்லை என பதிலளிக்காமல் சில புள்ளிவிபரங்களைக் கூறினார். மூன்றாம் நிலைக்கு செல்லக்கூடாது என நினைக்கவேண்டுமென மக்களுக்கு ஆறுதல் கூறினார்.இதற்கிடையில் மூன்றாம் நிலைக்கு சென்றுவிட்டோம், மூன்றாம் நிலையில் அடியெடுத்து வைத்துவிட்டதாக தோன்றுகிறது. இரண்டாம் கட்டத்தில் தான் உள்ளோம் பல்வேறு கருத்துக்களை மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.நாடுமுழுவதும் ஞாயிறன்று மட்டும் 472 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,374 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தி அரசின் சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறினார்.கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லையென இந்திய மருத்துவ ஆரய்ச்சி நிறுவனம் ஞாயிறன்று தெரிவித்துள்ளது.

;