tamilnadu

img

கொரோனா நிதி... ரூ.150 கோடி வழங்கிய ஜாக்டோ-ஜியோ

மதுரை:
தமிழகத்திலுள்ள 12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், சிறப்புக்காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு அங்கன்வாடிப்பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில்  ஒருநாள் ஊதியமான ரூ.150 கோடியை கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.மதுரை  ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்புக் குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை  மனு அனுப்பும் போராட்டம் புதனன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க.நீதிராஜா, சந்திரன் தலைமையில் புதனன்று நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பொற்செல்வன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ. செல்வம், மாவட்ட  நிதிக்காப்பாளர் ஒச்சுக்காளைஉள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

போராட்டத்தை தொடர்ந்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டிய கோரிக்கை களை மதுரை ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் அளித்தனர். அதை அவர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.தொடர்ந்து நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 ஜனவரி 2019 போராட்டத்தில் 5,068நபர்கள் மீதான ஒழுங்கு நட வடிக்கையை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வுகாண வேண்டும்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது வழக்குகள்  நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வு, வருடாந்திர ஊதிய உயர்வு, பணி ஓய்வு, பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு 17 (பி) குற்றக் குறிப்பாணை பெற்ற ஒரே காரணத்திற் காக, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்காமல் இருப்பது ஓய்வு காலத்துக்கு பின் பழி வாங்கும் நடவடிக்கையாகும்.  பழிவாங்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும்.

கொரோனா களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்பனர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவத் துறை தொழில்நுட்பப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவம் சார்ந்த பணியாளர்களுடன் இணைந்து பொது சுகாதாரத்துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை  உள்ளிட்ட அனைத்துத் துறைஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு மருத்துவ பாது காப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசிற்கு போதிய நிதி ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலை உள்ளதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர்  பொது நிவாரண நிதிக்குதமிழகத்திலுள்ள 12 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு அங்கன்வாடிப் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்களது ஒருநாள் ஊதியமான 150 கோடி வழங்கியுள்ளது.இவ்வறு அவர்கள் கூறினர்.

;