உலகக்கோப்பையின் மிக சிறந்த இறுதிப்போட்டிகளில் ஒன்று. வாழ்த்துக்கள் அர்ஜெண்டினா. மெஸ்ஸி விளையாடுவதையும், அவர் அணியை வழிநடத்துவதையும் பார்ப்பது ஒரு விருந்தாக இருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர்
சீத்தாராம் யெச்சூரி டுவிட்டரில் வாழ்த்து...
உலகக்கோப்பையின் சிறந்த இறுதிப்போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. ஒரு போட்டியின் முழுமையான சிறப்புடைய ஒன்றாக பிரான்ஸ் மாப்பேவின் ஹாட்ரிக் இருந்தது. உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும், மெஸ்ஸிக்கும் வாழ்த்துக்கள். மார்டினெஸுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து...
பரபரப்பான இறுதிப்போட்டியுடன், கால்பந்து வரலாற்றில் கத்தார் உலகக்கோப்பை பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்ட பக்கமாக இருக்கும். இறுதிப்போட்டியின் ஒவ்வொரு நிமிடமும் எதிர்பாராத அற்புதங்களால் அழகான தருணங்களால் நிறைந்திருந்தது. உலகக்கோப்பை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும், மெஸ்ஸிக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் தெரிவித்த வாழ்த்து மடல்...