tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி, விவசாயத்தொழிலாளர் சங்க தலைவர் தோழர் ஆர்.சந்திரமோகன் காலமானார்.... சிபிஎம் மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலி....

விருதுநகர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர்மாவட்ட செயற்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான தோழர் ஆர்.சந்திரமோகன் ஏப்ரல் 8 அன்று காலமானார்.

அவரது மறைவு குறித்துகட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: 

நாடு முழுவதும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட போது, கல்விபெறும் வாய்ப்பை பெறாத அடித்தட்டு மக்களுக்கு எப்படி யேனும் எழுதப் படிக்க கற்றுத்தர வேண்டும் என்ற உன்னதலட்சியத்தோடு அதில் தம்மை இணைத்துக் கொண்டார் தோழர் ஆர்.சந்திரமோகன். இதே லட்சியத் தோடு அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அமுதவள்ளியும் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்தார். நாளடைவில் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்ட னர். பின்பு, இருவருக்கும் கட்சியின் தலைமையில் விருப்பத் திருமணம் முடித்து வைக்கப்பட்டது. இவர்களுக்கு சுந்தரய்யா என்ற மகனும், செம்மலர் என்ற மகளும் உள்ளனர்.

தோழர் ஆர்.சந்திரமோகன், இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். அதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு திறம்படப் பணியாற்றினார்.  கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், அருப்புக் கோட்டை வட்டாரச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். பின்பு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், கட்சியின் மாவட்டச்செயற்குழு  உறுப்பினராகவும் பொறுப்புவகித்து வந்தார். அர்ப்பணிப்புடன் மக்கள்பணியாற்றக்கூடிய மகத்தான மக்கள் ஊழியர் ஆவார்.100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களைத் திரட்டிப்பல போராட்டங்களை நடத்தி யவர். அருப்புக்கோட்டை வட்டாரத்தில் நிகழ்ந்ததீண்டாமைப் பிரச்சனை களுக்கு எதிராக வலுவாக தலையீடு செய்து வெற்றி கண்டவர். கொரோனா எனும் கொடிய நோய் அவரைப் பாதித்தது.  சிகிச்சைக்காக மதுரைஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்த போதும், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை ஏழு மணிக்கு தோழர் ஆர்.சந்திரமோகன் உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மதுரை மாநகர்மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரா.லெனின், ஜா.நரசிம்மன், விருதுநகர்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, எல்.முருகன், வி.முருகன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.ஜெயபாரத், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சமயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் ஆகியோர் சந்திரமோகன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிபிஎம் மாநிலச் செயற்குழு அஞ்சலி

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஆர்.சந்திரமோகன் (வயது 51) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், ஏப்ரல் 8 அன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு செவ்வஞ்சலியை செலுத்துகிறது.தோழர் ஆர்.சந்திரமோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராவார்.  இந்திய ஜனநாயகவாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவ ராகவும், கட்சியின் அருப்புக்கோட்டை ஒன்றியச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். விருதுநகர் மாவட்டத்தில் உழைக்கும் மக்களின் நலன்களுக்கான பல்வேறு போராட்டங் களை முன்னின்று நடத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். தற்போது விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்தார். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.

அவரது மறைவால் துயருற்றிருக் கும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலை யும் தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காகவே உழைத்த சமரசமற்ற போராளி

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் சந்திரமோகன் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியில்  வசித்து வந்தார். 1989 இல் அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளராகவும் செயல்பட்டவர். மக்களோடு   மக்களாக ஒன்றிப் பழகும் அற்புதமான தோழர். நூறு நாள் வேலையில்  வேலை கேட்டும், கூலி கேட்டும் நடக்கும்போராட்டங்களில்  முக்கியப்பங்காற்றி யவர். மாவட்டம் முழுவதும்  நன்கு அறியப்பட்டவர். தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே  உழைத்த ஒரு சமரசமற்ற போராளி. அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. இவர் விட்டுச்சென்ற பணியை நாம் தொடர்வோம். இதுவே நாம் இவருக்கு  செலுத்தும் அஞ்சலி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

;