tamilnadu

img

தோழர் என்.வேலுமணி காலமானார்

மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் என்.வேலுமணி காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகரில் பொன்னகரம் பகுதியின் கட்சிக் கிளை செயலாளர், பெத்தானியாபுரம் கட்சிக் கிளை உறுப்பினர், தமிழ்நாடுமுற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர் சங்கத்தின் அரசரடி கிளை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தமதுரை பெத்தானியாபுரம் தோழர் என்.வேலுமணி உடல்நலக்குறைவின் காரணமாக சனிக்கிழமை இரவு 10 மணியளவில் காலமானார்.இவர் தீக்கதிர் நாளிதழின்திருப்பூர் மாவட்ட செய்தியாளர் வே.தூயவனின் தந்தையாவார். மறைந்த என்.வேலுமணிக்கு பி.சரஸ்வதி என்ற மனைவியும், வே.தூயவன், வே.ஜீவானந்தம், வே.பரிணாமன் என்ற கதிரவன் ஆகியமூன்று மகன்களும் உள்ளனர்.

மறைந்த தோழர் என்.வேலுமணி டிவிஎஸ் தொழிலாளியாக பணியாற்றியுள் ளார். அங்கு தொழிற்சங் கத்தை கட்டமைக்க முயற் சித்தபோது நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு மதுரையிலிருந்து விராலிமலைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 1973-ஆம் ஆண்டு முதல் கட்சி உறுப்பினராக உள்ளார்.தீவிர வாசிப்பாளர் மட்டுமல்லாது செம்மலர், மார்க்சிஸ்ட்இதழ்களின் பெத்தானியாபுரம் பகுதி முகவராக கடைசிவரை இருந்துள்ளார். “ஒருதொழிலாளியின் அமெரிக்கபயணம்” மற்றும் குழந்தைகள் நூல் ஒன்றையும் எழுதிவெளியிட்டுள்ளார். பெத்தானியாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவளர்ப்பதில் முக்கியப் பங் காற்றியவர் தோழர் என்.வேலுமணி.அன்னாரது மறைவுச் செய்தியறிந்ததும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் ஆசிரியருமான மதுக்கூர் இராமலிங் கம், மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், தீக்கதிர்பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன், மு.சங்கரநயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பாலசுப்பிரமணியம், மூத்த தலைவர் பா.மாரிச்சாமி, அரசரடி பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன் உள்ளிட்ட பலர்அன்னாரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத் தினர்.கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மற்றும் மாநிலச்செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் வேலுமணியின் மறைவிற்கு இரங் கல் தெரிவித்துள்ளனர்.இறுதி நிகழ்ச்சி ஞாயிறு பிற்பகல் ஒரு மணிக்கு பெத்தானியாபுரத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.