தோழர் முருகானந்தத்தின் தொழிற்சங்க பணியே இளம் ஊழியர்களுக்கு பாடம் பணி நிறைவு விழாவில் தலைவர்கள் புகழாரம்
சென்னை, ஜூலை 1 – தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சென்னை மண்டலச் செய லாளர் ஏ. முருகானந்தம் திங்களன்று (ஜூன் 30) அன்று பணி ஓய்வு பெற்றார். இதை யொட்டி அமைப்பின் தென் சென்னை கிளை-1 சார்பில் எம்ஜிஆர் நகரில் பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது. இந்நிகழ்வில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு உறுப்பினர் கே.கனக ராஜ், “சமூகத்திற்கு தம்மை அர்ப்பணித்துக் கொள்வது கம்யூனிஸ்ட்டின் குணம். ஊழியர், சமூகத்தின் நலனுக்காக போராடுகிற தொழிற்சங்கத் தலைவர் களை அதிகாரிகளும், நிறு வனமும் மரியாதையுடனே அணுகும். பலரது குடும்ப த்தை வாழ வைத்தவர்களாக தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளனர் என்பதற்கு நமது முன்னோடிகள் உதாரணம். அந்த வகையில் செங்கொடி இயக்கத்தின் சொத்து முரு கானந்தம்” என்றார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் குறிப்பிடுகையில், “அநீதிக்கு எதிராக எப்போதும் முருகானந்தம் குரல் கொடுப்பார். நேர்மை யாக செயல்பட்டார். கேங் மேன் பணி தேர்வர்களுக்கு மத்திய அமைப்பு பயிற்சி வகுப்பு நடத்தியபோது அதில் முதன்மையான பங்கு வகித்தார். ஊழியர் கோரிக்கை சார்ந்த போராட் டம் என்பது மாறி பொதுத் துறை நிறுவனங்களை பாது காக்க தொழிற்சங்கம் போராடிக் கொண்டிருக் கிறது. மாதாந்திர மின் அளவீடு முறையை செயல்படுத்தி னால் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ப தால் அந்த திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தாமல் உள்ளது. ஒன்றிய அரசின் மிரட்டலால் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் தனி யார் மூலம் செயல்படுத்தப் படுகிறது. இதனை புறந் தள்ளி கேரளாவில் அரசே செயல்படுத்தும் என்று முடி வெடுத்துள்ளது. இதுதான் சோசலிச மாடல். என்றார். மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய் சங்கர், “இளம் ஊழியர்களை கண்டெடுத்து பயிற்றுவித் தவர். அவர் பணியாற்றிய இடங்களிலெல்லாம் சங் கத்தை விரிவாக்கம் செய்த வர்; முன்னிலைக்கு கொண்டு வந்தார். இனி சமூக மாற்றப் பணியை தடை யின்றி தொடர்வார்” என்றார். “துறையிலும், சங்கத்தி லும் நேர்மையோடு பணி யாற்றினார். அவரது தொழிற் சங்க வாழ்க்கையே இளந் தலைமுறைக்கு பாடம். லஞ்சம் புழங்கும் துறை களின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள மின் துறையை 62வது இடத்திற்கு கொண்டு செல்ல பணிக் கலாச்சாரத்தை மாற்றுவோம்” என்று மத்திய அமைப்பின் பொதுச் செய லாளர் எஸ்.ராஜேந்திரன் குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு கிளை -1ன் தலைவர் டி. பண்டாரம் பிள்ளை தலைமை தாங்கி னார். செயலாளர் எஸ். குமார் வரவேற்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென் சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை), மாநில க்குழு உறுப்பினர் வே. ராஜ சேகரன், சிஐடியு தென் சென்னை மாவட்டச் செய லாளர் பா. பாலகிருஷ் ணன், மூத்த தலைவர் எஸ்.அப்பனு மத்திய அமைப்பின் பொருளாளர் எம். வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், ஆர்.ரவிக் குமார், துணைத் தலைவர் கள் எம். தயாளன், எம்.சாலட், மாநிலச் செய லாளர் எஸ்.கண்ணன், பொறி யாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. அருட் செல்வன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். சுப்ரமணியம், பொரு ளாளர் ஏ. பழனி, கிளைத் தலைவர் டி.மோகன், செய லாளர் வி.பங்குனியான் மற்றும் மின்வாரிய அதிகாரி கள் கலந்து கொண்டனர். மத்திய அமைப்பின் கிளை பொருளாளர் எஸ்.பழனி நன்றி கூறினார். இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கட்சி, நிர்மல் பள்ளி, சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தீக்கதிர், மின் கதிர், ஓய்வூதியர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு 70 ஆயிரம் ரூபாயை வளர்ச்சி நிதியாக முருகானந்தம் வழங்கினார்.