நாகர்கோவில், ஆக.21- பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவா 114வது பிறந்தநாளையொட்டி வெள்ளி யன்று நாகர்கோவிலில் உள்ள மணிமண்ட பத்தில் ஜீவா சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அகமது உசைன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தங்கமோகனன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி, மாநகர குழு செயலாளர் கே.மோகன், இடைகுழு உறுப்பினர்கள் எஸ்.அருணாசலம்,ராஜ நாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.