tamilnadu

img

ஒடுக்கப்பட்டோர் குரலாக கம்யூனிஸ்ட்டுகள்

திண்டுக்கல், மார்ச் 27- எளியவர்களின் குரலாக, ஒடுக்கப்பட்டவர் களின் குரலாக, சிறுபான்மையினரின் குரலாக விளங்குபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று திரைக் கலைஞர் ரோகிணி பெருமிதத்துடன் கூறினார். திண்டுக்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் கலைமாலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கவுரை யாற்றிய அவரது உரை வருமாறு: எதை சாப்பிட வேண்டும், எதை பேச வேண்டும். எதை படிக்கணும் என்று நிர்பந்திக் கிறார்கள். சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று  சொல்கிறார்கள். நமது குழந்தைகள் சமஸ்கிருதம் படித்துவிட்டு என்ன செய்வார்கள்? அர்ச்சகம் மட்டும் தான் செய்யனும். அதையும் செய்ய முடி யாது.  ஆனால் இது அப்படி இல்லையே! புழக்கத்தில் இருக்கிற மொழியாக இருந்தால் கூட, அதை படித்துக்கொள்ளலாம்.  கட்டாயப்படுத்தி இதை நீ சாப்பிடக்கூடாது. இதை பேசக்கூடாது, இதை உடுத்தக்கூடாது என்று ஒரே மாதிரியாக நாடு முழுவதும் இருக்க  வேண்டும் என்ற ஒரு போக்கு உள்ளது. ஆனால் பன்மைத்துவம் நமது வலிமை. ஒரு வீட்டில் இருக்கிற 5 பேர் கூட ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். எங்கள் வீட்டில் அப்பா, அம்மா உட்பட 7 பேர் இருப்போம். 7 பேரும் 7 விதமாக இருப்போம். ஒரு வீட்டில் இருப்பவர்களே ஒரே மாதிரி யாக இருக்க மாட்டார்கள். ஒரு வீதியில் வசிப்பவர்களும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.  காடு என்றால் ஒவ்வொரு பூவும், ஒவ்வொரும் மரமும் தனித்துவத்துடன் விளங்குகிறது. அப்படி யிருந்தால் தான் அது காடு. இயற்கையின் நியதி  அது. இந்த இயற்கைக்கு மாறாக ஒரே மாதி ரியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. 

இந்த வற்புறுத்தலை நாம் எப்படி எதிர்கொள்வது? ஒரு வார்த்தை அப்படி பேசினால், ஒரு வார்த்தை இப்படி பேசினால் கைது செய்வோம் என்ற காலக்கட்டம் ஆகி விட்டது. கன்னட நடிகர் கைது செய்யப்பட்டுள் ளார். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்துள் ளார்கள். இந்த சம்பவங்கள் எதை காட்டுகிறது என்றால், அவர்கள் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. இந்த மேடையில் பேச்சாக, கவிதையாக, பாடலாக, சினிமாவாக எங்களுக்கு எது தேவை என்பதை பேசுவோம். நம் பக்கம் உண்மை இருப்பதால் நமக்கு தைரியம் இருக்கிறது. உண்மை இருக்கும் போது தைரியமாக இருக்கலாம். அதனால் தான் நமது தோழர்கள் தைரியமாக இருப்பார்கள். நாங்கள் ஊழலுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள். எளியவர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அங்கு முதலில் போய் நிற்பது நமது  தோழர்கள் தான். கம்யூனிஸ்ட்டு தான். இதை எல்லோரும் ஒத்துக்கொள்கிற விசயம். அதற்குக் காரணம் எளியவர்களின் குரலாகவும், ஒடுக்கப் பட்டவர்களின் குரலாகவும், சிறுபான்மையினரின் குரலாகவும் இருப்பது தான். 

இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை தென்னிந்தியா சொல்லிக்கொண்டி ருக்கிறது. மிக முக்கியமாக தமிழ்நாடு சொல்லிக்கொண்டிருக்கிறது. அது ஒரு நாளில் வந்துவிடவில்லை. நமது முன்னோர்கள், வழி காட்டிகள் நம்மை வழிகாட்டிப் போக ஒரு  பாதை உள்ளது. அந்த பாதையில் தைரிய மாக செல்வதினால் தமிழ்நாடு மற்ற மாநி லங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக இருக்கிறது.  எது வேண்டாம் என்று தெரிந்து கொள்வதில் தான் இருக்கிறது நமது முன்னேற்றம். பிரிவினை வாதம் தேவையில்லை. மதத்தின் பெயரால்  நம்மை பிளவுபடுத்தும் சக்திகள் தேவை யில்லை. சாதியின் பெயரால் நம்மை கூனி குறுகச் செய்யும் யாரும் நமக்கு தேவையில்லை.  வேறு வேறு விதத்தில் நாம் இயங்கிக் கொண்டுதானிருப்போம். ஆனால் எல்லோருக் கும் சமத்துவம் வேண்டும் என்பதில் ஒரே குரலாக இருப்போம். சமத்துவத்திற்காக பாடுபடுவோம். அந்த சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக பாடு படுவோம். அதை அடையும்வரை நாம் ஓயமாட் டோம். இங்கிருக்கும் அனைத்து தோழர்களும் அதற்காகவே தான் ஒன்று கூடியிருக்கிறோம்.  எனவே இந்த கலை மாலையை துவக்கி வைப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெரு மைப்படுகிறேன். ஒரு திரைக்கலைஞராக ஒரு தோழராக இந்த மேடையில் நிற்பது எனக்கு மிக பெரிய பெருமையாக உள்ளது. இதற் காகவே நான் ஓடி ஓடி வருவேன். இவ்வாறு திரைக்கலைஞர் ரோகிணி பேசினார். (ந.நி.)

;