tamilnadu

img

கோவை கோனியம்மன் தேர் திருவிழா: மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய இஸ்லாமியர்கள்

கோவை கோனியம்மன் தேர் திருவிழா: மத நல்லிணக்கத்தை பறைசாற்றிய இஸ்லாமியர்கள்

கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா தேரோட்டம் செவ்வாயன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ராஜா வீதியில் இருந்து புறப்பட்ட தேர், ஒப்பணக்கார வீதி, வைசியால் வீதி, கருப்பக் கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோனியம்மனை வழிபட்ட னர். முன்னதாக, தேர் பவனி அத்தார் ஜமாத் பள்ளிவாசல் வழியாக சென்ற போது, அங்கு பள்ளிவாசல் நிர்வா கத்தின் சார்பில் பக்தர்களுக்கு சுமார் 5,000 தண்ணீர் பாட்டில்கள் வழங்கப் பட்டன.  ஒவ்வொரு ஆண்டும் கோனி யம்மன் கோவில் தேரோட்டத்தின் போது இந்து பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர், குளிர்பானங்கள் கொடுத்து உபசரிப்பது வழக்கமான ஒன்று என்று அத்தார் ஜபாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.