tamilnadu

img

தொழில்முனைவோர், மாதச் சம்பளதாரருக்கு கூட்டுறவு கடன்....

மதுரை:
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர், மாத சம்பளதாரர்களுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில்,  பயிர்க்கடன், உரம் வழங்குவது குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

டெல்டா மாவட்டங்களைப் பொறுத்தவரை குறுவை சாகுபடிக்காக, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தாமதமின்றி பயிர்க்கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 69 ஆயிரத்து 882 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள்இருப்பில் உள்ளன.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள்,வணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பிரிவினருக்கு கடன்வழங்கும் சிறப்பு திட்டங்களை கூட்டு றவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தமிழ்நாடு மாநில தலைமைக்கூட்டுறவு வங்கி, தொழில்முனை வோருக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நகை அடமானத்தின்பேரில் கடன்வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 6 சதவீதவட்டியும், 24 சமகால தவணைகளில் திரும்பிச் செலுத்தும் வகையில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கும் தனிநபர்கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மாத சம்பளதாரர்களுக்கு ரூ.2 லட்சம் வரை 5 சதவீதம் ஆண்டு வட்டியில் நகைக்கடன் வழங்கப்படும். இக்கடன் 12 மாதங்களுக்குள் திரும்பி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

;