அறந்தாங்கி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா, அறிமுக பயிற்சி திட்டம்
அறந்தாங்கி, ஜுன் 30- புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவலூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் அறந்தாங்கி அரசு கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கு முதலாம் ஆண்டு சேர்க்கை பெற்றிருக்கும் மாணாக்கர்களுக்கு வகுப்பு துவக்க விழா மற்றும் ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர். ம.துரை தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அனைத்து துறை தலைவர்கள் பேசினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளிடம் பயிற்சி அறிமுக உரை ஆற்றினார். முன்னதாக, தமிழ்த்துறை பேரா. பழனிதுரை வரவேற்று பேசினார். விடுதி காப்பாளர் சந்தானலெட்சுமி, அனைத்து துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்துறை பேரா. முனைவர். கணேஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆங்கிலத் துறை பேரா. அபிராமி நன்றி கூறினார்.