tamilnadu

img

குழந்தைகள் இல்லங்களை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்

குழந்தைகள் இல்லங்களை  பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு  ஆணையத் தலைவர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜுன் 30-  குழந்தைகள் இல்லங்களை பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு அவர் தெரிவித்ததாவது:- குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின்கீழ் செயல்படும், புதுக்கோட்டை மாநகராட்சி, நரிமேடு, அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், மார்த்தாண்டபுரம் ஆரோக்கியா குழந்தைகள் இல்லம் மற்றும் இராஜகோபாலபுரம் நேசக்கரம் சிறப்பு தத்தெடுத்தல் மையம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திற்கு சாலை வசதி மற்றும் பேருந்து வசதிகள் ஏற்படுத்திடவும், குழந்தைகள் நலக்குழு இல்ல குழந்தைகளை முன்னிலைப்படுத்தி, குழந்தைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஏற்படுத்துதல் குறித்தும், குழந்தைகள் இல்லங்களை பாதுகாப்பான முறையில் பராமரித்து, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார். மாவட்ட ஆட்சியர் மு.அருணா, ஆணைய உறுப்பினர்கள் ஆர்.ஜெய சுதா, வி.உஷா நந்தினி, வி. செல்வேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், வட்டாட்சியர் மு.செந்தில்நாயகி, தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பி.தெய்வாணை, மாமன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.