tamilnadu

img

கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

அரியலூர், நவ.29 - பல்வேறு பொக்கிஷங்கள் நிறைந்த அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத் திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். கொள்ளிடத்திற்கு வடக்கே - வெண்ணாற்றுக்கு தெற்கே - ஊடாற்றுக்கு வடக்கே - சிதம்பரத்துக்கு மேற்கே - இந்த அரியலூர் உருவாக்கப்பட்டது. கங்கையை வென்ற முதலாம் இராசேந்திர சோழன் இங்கே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினார். தனது ஆட்சிக் காலத்தில் தலை நகரைத் தஞ்சையில் இருந்து இந்த சோழ புரத்துக்கு மாற்றினார்.  கலிங்கச் சிற்பங்கள், மாளிகை மேடு, யானை சுதை சிற்பம், இரட்டைக் கோயில் என்று  எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள், கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் இது. சுண்ணாம்புக் கல், மணற்கற்கள், பாஸ்பேட் முண்டுகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமங்கள்  நிறைந்த பகுதிகளாக விளங்கிக் கொண்டிருக் கிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. 

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து, அரியலூர்  என்ற புதிய மாவட்டத்தை 2007 ஆம் ஆண்டு  முத்தமிழறிஞர் கலைஞர்தான் உருவாக்கினார். அரியலூர் மாவட்டத்தில் நடத்தப்படும் அகழ்வாரா ய்ச்சியின் போது கிடைக்கப் பெறும் புதைபடிவங் களை கொண்டு அருங்காட்சியகம் ஒன்று வாரண வாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.10  கோடி மதிப்பிலான புதைபடிவப் பூங்கா அமைப்ப தற்காகவும், வாரணவாசி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சுவர் அமைக்கக் கூடிய பணிகள் நடைபெறுகின்றன. கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெறக் கூடிய அகழாய்வு பணிகள் அனை த்தும் திங்களன்று நேரில் பார்வையிடப்பட்டது. தெற்காசிய நாடுகளை வென்று, கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் மாமன்னர் இராஜேந்திரசோழன். இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக் கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுட னும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டி ருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், “கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்” என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

பெரம்பலூரின் சிறப்புகள்

அரியலூருக்கு அருகில் இருக்கக் கூடிய பெரம்பலூரும் ஏராளமான சிறப்புகளைப் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்ட இடம்தான் பெரம்ப லூர். அழகிய மலைகளும், அதில் அரிய வகை விலங்குகளும் இருந்த பகுதி இது.  ஆயிரம் ஆண்டிற்கு முந்தைய கோவில்கள்  உள்ள பகுதி இது. மூன்றாம் குலோத்துங்க  சோழன் காலம் முதல் மூன்றாம் இராச ராசன் காலம் வரையிலான கல்வெட்டுகள் பெருநெற்குன்றம் கோவிலில் இருந்தி ருக்கின்றன. சோழர்கள் காலத்தில் வெண்பாவூர் என்பது வணிக மையமாக விளங்கி வருகி றது. சமணம் மற்றும் பவுத்த சமயம் தழைத்தோங்கிய இடமாகவும் இது இருந்துள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அமைந்துள்ளது.  தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தித் திட்டத்திற்காக 13 வரு வாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத் தப்பட்ட 11 கிராமங்களில் உள்ளடங்கிய நிலங்  களை, மீண்டும் உரிய உடமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 306 உடமையாளர்களின் விபரங்கள் கண்ட றியப்பட்டு, அவர்களுக்கு உறுதிமொழி ஆணை வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மேலூர் மற்றும் இலையூர் மேற்கு ஆகிய 2 கிராமங்களுக்கும், கையகப்  படுத்தப்பட்ட நிலங்களை உடமையா ளர்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
 

;