திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69ஆவது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.