tamilnadu

img

எல்லாமே தனியார் மூலம்!

சென்னை, மார்ச் 27 – சாலையோரம் வாகனங்களை நிறுத்தினால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திங்க ளன்று (மார்ச் 27) மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டு மேயர் பேசுகை யில், வாகனங்களை நிறுத்த நடைமுறையில் உள்ள  சிக்கலை தீர்க்க ‘பிரத்யேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம்’ என்ற பிரிவு உரு வாக்கப்படும். முக்கியமான வணிக பகுதிகள், சாலை யோரங்களில் வாகனம் நிறுத்துவோரிடம் இருந்து 3 மண்டலங்களில் தனியார் நிறுவனம் வாயிலாக தினசரி  1.20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படு கிறது. எனவே, எஞ்சியுள்ள 12 மண்டலங்களிலும் பொது-தனியார் கூட்டு முறையில், சாலையோரம் வாகனம் நிறுத்துவோரிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்றார். மாநகராட்சியில் உள்ள 786 பூங்காக்களில், 584 பூங்காக்கள் ரூ.46 கோடி செலவில், மீண்டும் தனியார் வாயிலாக பராமரிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அண்ணாநகர் வேலங்காடு மயான பூமியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொது-தனியார் கூட்டு  முறையில், உயிர்நீத்தோரின் உடல்களை பாது காக்கும் அறை அமைக்கப்படும் என்றார்.

மக்களைத் தேடி மேயர்

மாதத்தில் ஒருமுறை ஏதேனும் ஒரு மண்டலத்தில் மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று, விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ‘மக்ளைத் தேடி மேயர்’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும். மாமன்ற உறுப்பினர்கள் பதவி வகிக்கும் காலத்தில் இறந்தால் வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும், மாமன்ற உறுப்பினர் களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் மேயர் கூறினார். இதனைத் தொடர்ந்து வரி விதிப்பு மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் சர்பஜெயாதாஸ் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் வருவாய் பற்றா க்குறை 344.59 கோடி ரூபாயாகவும், நிதிப்பற்றாக் குறை 5.69 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வருவாயை பொறுத்தவரை, சொத்துவரி வாயிலாக 1680 கோடி ரூபாயும், தொழில்வரி வாயிலாக 500 கோடி ரூபாயும், முத்திரைதாள் மீதான கூடுதல் வரியின் மூலம் 250 கோடி ரூபாயும், மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் 850 கோடி ரூபாயும், இதர வருவாய் வாயிலாக 822 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், கடனுக்கான வட்டியாக 149 கோடி ரூபாய் செலவிட உள்ளதாகவும் தெரிவித்தார். பேருந்து சாலை பணிகளுக்கு 881 கோடி ரூபாயும், மழைநீர் வடிகால்வாய் பணிகளுக்கு 1483 கோடி ரூபாயும், திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 260 கோடி ரூபாயும், பாலப்பணிகளுக்கு 102 கோடி ரூபாயும், கட்டிட பணிகளுக்கு 104 கோடி ரூபாயும், சிறப்பு திட்டங்களுக்கு 313 கோடி ரூபாயும், பூங்கா விளையாட்டு திடல்கள் அமைக்க 77 கோடி ரூபாயும் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 

;