tamilnadu

img

மிதமான மழை: வானிலை மையம்

சென்னை, ஜன. 8 - தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஒரு  சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆக.9 வரை தமிழக கடலோர மாவட்டங் கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்க ளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசா னது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழகத்தின் உள் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. ஜன 10 முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.