tamilnadu

img

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 ஏப். 1-இல் துவங்குகிறது

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2026 ஏப். 1-இல் துவங்குகிறது

 நாடு தழுவிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான, வீடுகளைப் பட்டி யலிடும் பணி 2026 ஏப்ரல் 1 முதல் தொ டங்க உள்ளதாக இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது.  இதுவே நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியின் முதல் கட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு கட்டங்களாக நடைபெற விருக்கும் இந்தப் பணியின் முதல் கட்டத்தில், கணக்கெடுப்பாளர்கள் ஒவ் வொரு வீட்டிற்கும் நேரில் சென்று, அந்த வீட்டின் கட்டமைப்பு, அங்குள்ள வசதி கள், குடும்பத்தினரின் சொத்து விவரங் கள் போன்ற தகவல்களைச் சேக ரிப்பார்கள்.  பெரும் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படும் இரண்டாம் கட்டப் பணிகள் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று துவங்கும். இந்தக் கட்டத்தில் தான் மக்கள் தொகை, அவர்களின் சமூக - பொருளாதார நிலை, கல்வி, கலாச்சா ரப் பின்னணி போன்ற மிக விரிவான தக வல்கள் சேகரிக்கப்படும். குறிப்பாக, இந்த முறை மக்கள் தொ கைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மாபெரும் பணிக்காக நாடு முழு வதும் 34 லட்சத்திற்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற் பார்வையாளர்களும், 1.3 லட்சம் துணைப் பணியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.  எனினும், 4 ஆண்டுகளாக கணக்கெ டுப்பைத் தள்ளிப் போட்டு வந்த மோடி  அரசு, அடுத்தாண்டு கணக்கெடுப்பு துவங்கும் என்று கூறி, அதற்கான அரசா ணையை தற்போது வெளியிட்டுள்ளது.