tamilnadu

“சாதிய வன்முறைகளும் இடதுசாரிகளின் போராட்டங்களும்”

“சாதிய வன்முறைகளும் இடதுசாரிகளின் போராட்டங்களும்”

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை நடத்தக்கூடிய “கேம்பஸ் கார்னிவல்”என்கிற அரசியல் கலந்த உற்சாகத் திருவிழா 4 நாட்களாக நடைபெற்று வரு கிறது. அதன் ஒரு பகுதியாக அக்டோ பர் 23ஆம் தேதி சாதியத்தின் வீரியம், பகுதிவாரியான வேறு பாடுகள் மற்றும்  எதிர்ப்பதற்கான சவால்கள், மாற்று வழிகள் என்கிற தலைப்பில் நடைபெற்ற விவா தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான கே.ஜி.பாஸ்கரன் கலந்து கொண்டு தென் தமிழகத்தின் சாதிகளின் உருவாக்கம் குறித்தும் வன்முறை கள் குறித்தும், அதற்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டங்கள் குறித்தும் உரையாடினார். அவருடன் தலித் செயற்பாட்டாளர் ஷான் குமார் மற்றும் தமிழ்நாட்டின் சாதிகள் குறித்தான ஆராய்ச்சி மேற் கொள்ளும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் நவீன் பிரான்சிஸ், பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவர் அருண்  ஆகியோர் விவாதித்தனர். இந்நிகழ் வினை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சச்சி சோம், பல்கலைக்கழ கத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.