கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோயிலில் ஏகாதேசி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொள்ள ஏராளமான மக்கள் கூடிய நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒன்றிய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
