இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமான தஜிகிஸ்தான் அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியுள்ளது.
மத்திய ஆசியாவின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்தது. கிஸார் மிலிட்டரி ஏரோட்ரோம் என அழைக்கப்படும் இந்த தளம், இந்தியாவின் முதல் மற்றும் ஒரே வெளிநாட்டு இராணுவத் தளம் ஆகும். இந்நிலையில் 2021ஆம் ஆண்டில் இரண்டாம் பாக வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாது என தஜிகிஸ்தான் இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்தது.
அதன்படி இந்தியா தனது இராணுவத்தை திரும்பி வர உத்தரவிட்டது இதன் மூலம், இருபது ஆண்டுகளாக நீடித்திருந்த இந்தியாவின் தாஜிகிஸ்தான் இராணுவ இருப்பு முடிவுக்கு வந்தது. இது தற்போது முழுமையாக முடிவுக்கு வந்தது.
தஜிகிஸ்தானின் இந்த முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக இந்தியா உடனான இருதரப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
